2ஜி அலைக்கற்றை ஊழலில் யார் யாருக்கு எவ்வளவு தொகை பங்கு பிரிக்கப்பட்டது என்பது குறித்து புட்டுப்புட்டு வைத்திருக்கிறார் அரசியல் வி்மர்சகர் ஸ்ரீஅய்யர். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் ஆ.ராசா, 2007-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, 2008-ம் ஆண்டு 2ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. இதில், 1.76 லட்சம் கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, 2010-ம் ஆண்டு ஆ.ராசா பதவி விலகினார். இந்த விவகாரத்தை கையில் எடுத்து பா.ஜ.க.வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, 2012-ம் ஆண்டு கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இதைத் தொடர்ந்து, 122 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்த ஊழல் விவகாரம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஊழல் உலகளவில் நடந்த 10 மிகப்பெரிய ஊழல்களில் ஒன்று என்று டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிடும் நிலைக்கு உள்ளானது.
இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், இந்த வழக்கில் சி.பி.ஐ. சரியான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் 2017-ம் ஆண்டு விடுதலை செய்தது. இதை எதிர்த்து சி.பி.ஐ. 2018-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்த சூழலில்தான், 2ஜி ஊழலில் கிடைத்த 1.76 லட்சம் கோடி ரூபாயில் யார் யாருக்கு எவ்வளவு பங்குத் தொகை பிரித்துக் கொள்ளப்பட்டது என்று பிரபல அரசியல் விமர்சகர் ஸ்ரீஅய்யர் புட்டுப்புட்டு வைத்திருக்கிறார்.
இதுகுறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “2ஜி ஊழல் விவகாரத்தில் கன்மொழி குடும்பத்தினருக்கு மட்டும் 51,000 கோடி ரூபாய் பங்குத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவுக்கு 3,000 கோடி ரூபாய் பங்கு. இதில், முக்கியப் பங்கு வகித்தவர் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம். இவர்தான் ஆ.ராசாவுக்கு அரிச்சுவடியை சொல்லிக் கொடுத்தவர். ஆனால், தனது பெயர் வெளியில் வராமல் பார்த்துக் கொண்டார். அவருக்கு 5,000 கோடி ரூபாய். இந்த விவகாரத்தில் தங்களுக்கு உதவியாக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 1,000 கோடி ரூபாய் பங்குத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது” என்று யார் யாருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது என்று தெளிவாக விளக்கி இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.