வெடிகுண்டை வைத்து விளையாடிய பாக்., குழந்தைகள் பலி – “இதெல்லாம் எங்க ஊர்ல சகஜம்மப்பா” பாக்., போலீசார் அறிக்கை

வெடிகுண்டை வைத்து விளையாடிய பாக்., குழந்தைகள் பலி – “இதெல்லாம் எங்க ஊர்ல சகஜம்மப்பா” பாக்., போலீசார் அறிக்கை

Share it if you like it

பாகிஸ்தானில் பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. உலகநாடுகள் அனைத்தும் பாகிஸ்தானை தனிமைப்படுத்தி இருந்தாலும் சீனா போன்ற ஒரு சில நாடுகளின் உதவியுடன் உயிர்பிழைத்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் குழந்தைகளின் எதிர்காலம் பயங்கரவாதத்தால் கேள்விக்குறியாகி உள்ளது.

ஆப்கன் போன்ற நாடுகளின் மூலம் கள்ளச்சந்தையில் பயங்கரவாதிகளுக்கு தேவையான ஆயுதங்கள் வந்து சேர்கின்றன. இதற்க்கு அரசும், அரசியல்வாதிகளும், ஏன் பாக்., ராணுவமும் கூட திரைமறைவில் உதவி வருகின்றன. அப்படி வந்து சேர்ந்த கையெறி குண்டுகளை விளையாட்டு பொம்மைகள் என நினைத்து விளையாடிக்கொண்டிருந்த 0-14 வயதுக்கு உட்பட்ட 3 சிறுவர்கள் குண்டு வெடித்ததில் பலியாகி உள்ளார் மேலும் 2 சிறுவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களால் பாகிஸ்தானில் இதுவரை பல குழந்தைகள் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை பாகிஸ்தான் போலீசார் வெளியிட்டுள்ளனர். “இதெல்லாம் எங்க ஊர்ல சகஜம்மப்பா” என்பது போன்ற இந்த அறிக்கை உலக அளவில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.


Share it if you like it