பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் 3 கோடி கூடுதல் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீடுகள் கட்டுவதற்கு உதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மோடி 3.0யின் இரண்டாவது பெரிய நடவடிக்கை இதுவாகும். பிரதமர் தனது முதல் கோப்பு அனுமதியில், பிரதமர் கிசான் நிதியின் 17வது தவணையாக, கிட்டத்தட்ட ₹20,000 கோடியை வெளியிட அனுமதித்தார், இது சுமார் 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் என்று கூறப்படுகிறது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமானது ஏழைகள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அற்புதமான ஒரு திட்டமாகும். PMAY ஊக்குவிப்பு தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பால் ஏற்படும் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2015-16ல் தொடங்கப்பட்டதில் இருந்து, PMAY ஆனது தகுதியான கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை கட்ட உதவியது, கடந்த பத்தாண்டுகளில் மோடி அரசு ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகளை கட்டி முடித்துள்ளது.
PMAY-ன் கீழ் கட்டப்பட்ட அனைத்து வீடுகளும் வீட்டுக் கழிப்பறைகள், எல்பிஜி இணைப்புகள், மின் இணைப்புகள் மற்றும் பிற மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களுடன் இணைந்து செயல்படும் வீட்டுக் குழாய் இணைப்புகள் போன்ற அத்தியாவசிய வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.