ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பலி : டெல்லி முதல்வரை விளாசும் நெட்டிசன்கள் !

ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் 3 மாணவர்கள் பலி : டெல்லி முதல்வரை விளாசும் நெட்டிசன்கள் !

Share it if you like it

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைப்பெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி, 849 தனியார் நிறுவனங்களுக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கப்பட்டன. இதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்தனர். இதே ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ தனியாக வழக்கு பதிவு செய்து கேஜ்ரிவாலை கைது செய்தது. அமலாக்கத் துறை வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், சிபிஐ கைது காரணமாக தொடர்ந்து சிறையில் இருக்கிறார்.

இந்த நிலையில் மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பலர் மீது டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைகளை முடித்த நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் டெல்லியில் அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. டெல்லி ராஜேந்திரா நகர் பகுதியில் ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக இப்பயிற்சி மையத்தின் தரை தளத்தில் வெள்ளம் புகுந்ததால் 20 மாணவர்கள் உள்ளே மாட்டி கொண்ட நிலையில் 17 மாணவர்கள் மீட்கப்பட்டனர். மேலும் தெலங்கானாவை சேர்ந்த தன்யா சோனி, உ.பி.யை சேர்ந்த ஷ்ரேயா யாதவ், கேரளாவை சேர்ந்த நவீன் டால்வின் ஆகிய 3 பேர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும் இப்பகுதியில் வடிகால்களை அடைத்துக் ஆக்கிரமிப்பு செய்ததால் மழைநீர் வெளியே செல்லாமல் தேங்கி நின்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சிக்கு பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

பயிற்சி மையத்தின் தரை தளத்தில் வாகன நிறுத்துமிடத்துக்கு மட்டுமே மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. ஆனால் விதிகளை மீறி அங்கு நூலகம் செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் சமூக வலைத்தள பதிவில் “பயிற்சி மையத்தின் அடித்தளம் வெறும் 10 நிமிடங்களில் நிறைந்து விட்டது. அப்போது மாலை 6.40 மணி இருக்கும். நாங்கள் போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை உதவிக்கு அழைத்தோம். அவர்கள் இரவு 9 மணிக்கு பிறகே வந்தனர். அதற்குள் எங்களின் 3 நண்பர்கள் இறந்து விட்டனர். 3 பேர் மருத்துவ சிகிக்சையில் உள்ளனர். அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று பதிவிட்டிருந்த சம்பவம் பெரும் பேசுபொருளானது.

ஒருபுறம் முதல்வரே ஊழல் செய்து சிறையில் இருக்கிறார். மறுபுறம் பொது வடிகால்களை வசதி படைத்தவர்கள் ஆக்கிரமித்து அட்டூழியம் செய்து வருகின்றனர். முதல்வர் சரியாக இருந்தால் தான் மக்கள் சரியாக இருப்பார்கள், இங்கு முதல்வரே தவறு செய்து சிறையில் மக்களை யார் வழிநடத்துவது. இவ்வாறு சமூக வலைத்தளங்களில் டெல்லி முதல்வரை கடுமையாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *