பார்க்கும் இடங்கள் எல்லாம் கையில் பிட் நோட்டீஸ், பைபிள்,வசனம், ஜெபம் என்று கிறித்துவ மிஷனரிகளின் அட்டூழியம் தலைவிரித்து ஆடுகிறது. வறுமையில் உள்ள மக்களை மூளை சலவை செய்து மதமாற்றம் செய்யும் நிகழ்வுகளும் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது. இதனை தமிழக அரசும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை தான் பார்க்கிறது. திமுக அரசு எப்படி நடவடிக்கை எடுக்கும். முதல்வர் ஸ்டாலினின் மகனே சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று மேடைகளில் பேசி வருகிறார். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ன.
இதுமட்டுமா கிறித்துவ,இஸ்லாமிய பண்டிகை வந்தால் முதல் ஆளாக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து சொல்கிறார்.ஆனால் ஹிந்துக்கள் பண்டிகை வந்தால் வாழ்த்து கூட சொல்லமாட்டார். இப்படி இருக்க மதமாற்றம் செய்யும் கும்பல்களிடமிருந்து மக்களை சில ஹிந்து அமைப்புகள் தான் காப்பாற்றி கொண்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் 14 பெண்கள் உட்பட 30 பேர், முஸ்லிம் மதத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு சட்டப்படி மாறியுள்ளன நிகழ்வானது அப்பகுதி மக்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இங்கு, சாஜா சன்ஸ்கிருதி மன்ச் என்ற ஹிந்து அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு சார்பில் நேற்று அங்குள்ள விநாயகர் கோவிலில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
இதில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 14 பெண்கள் உட்பட 30 பேர், வேத மந்திரங்கள் முழங்க, ஹிந்து மதத்திற்கு சட்டப்படி மாறினர். இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் சாம் பாவ்ரி கூறுகையில், “மத்திய பிரதேசத்தில் உள்ள மத சுதந்திர சட்டம் 2021ன் படி, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த 30 பேர் ஹிந்து மதத்திற்கு மாறினர்.
அவர்கள் அனைவரும், மாவட்ட நிர்வாகத்தில் முறைப்படி இதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். இதில், எந்த விதிமீறலோ, கட்டாயப்படுத்தியோ மதமாற்றம் நிகழவில்லை,” என்றார்.