ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைபயணமாக நேற்று முன்தினம் மாஸ்கோ சென்றடைந்தார். விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்நாட்டு மூத்த துணைப் பிரதமர் டெனிஸ் மான்டுரோவ் வரவேற்றார். பின்னர் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி ராணுவ மரியாதையும் சிவப்புகம்பள வரவேற்பும் வழங்கப்பட்டது.
மாஸ்கோ விமான நிலையம் சென்றடைந்த அவர், அங்கிருந்து புதினின் நோவோ-ஓகாரியோவோவில் உள்ள் அதிபர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருது என அழைக்கப்படும் “ஆர்டர் ஆப் செயிண்ட் ஆன்ட்ரூ தி அப்போஸ்தலர்” விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. ரஷ்யா- இந்தியா இடையேயான உறவை மேம்படுத்த மோடியின் அளப்பறிய பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது. இந்த விருதினை மோடிக்கு புதின் அணிவித்து கவுரவித்தார்.
விருதை பிரதமர் மோடியின் கழுத்தில் அணிவித்து, ரஷ்ய அதிபர் புதின் கவுரவப்படுத்தினார். அப்போது மோடியின் கழுத்தில் செயின் போல இருந்த விருது மாலை சில இடங்களில் மாறி கிடந்தது. அதை புதின், சரி செய்து விட்டார். ரஷ்ய அதிபர் புதினின் இந்த செயல் இரு தலைவர்களுக்கும் இடையே உள்ள நட்புறவு மற்றும் பிணைப்பை காட்டும் விதமாக இருந்தது. மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா – ரஷ்யா உறவு வலுப்பெற்றுள்ளது என்று புதின் கூறினார். ரஷ்ய நாட்டின் உயரிய விருதை பெற்றிருப்பது 140 கோடி மக்களுக்கு பெருமை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளர்.
இந்த விருது 300 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகிறது. இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியத் தலைவர் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.