உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்! என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் தி.மு.க. எம்.பி. கனிமொழி.
இதற்கு பா.ஜ.க தலைவர் ஹெச். ராஜா கனிமொழிக்கு இவ்வாறு பதிலடி கொடுத்து இருந்தார்.
குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை. ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றூக்கணக்கான ஈ.வெ.ரா. சிலைகள் உயிருள்ள சிலைகளா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 லட்சத்துக்கும் மேல் கடன் உள்ளதாக அண்மையில் நிதியமைச்சர் தெரிவித்து இருந்த நிலையிலும், கொரோனா தொற்றினால் பல ஏழை, எளியவர்கள், மிக கடுமையாக துன்புறும் இச்சமயத்தில். சென்னை மெரினாவில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் தெரிவித்து இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் #கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு 350 கோடியாம்! #GajaCycloneRelief
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 2, 2018
சென்னையில் அமையும் கலைஞர் நினைவிடத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு#Chennai | #KalaignarMemorial | #MarinaBeach pic.twitter.com/1u77GeRgod
— Polimer News (@polimernews) August 24, 2021
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளை போற்றும் விதமாக, அவரது வாழ்வின் சாதனைகளை, சிந்தனைகளை மக்களும், வருங்காலத் தலைமுறையும் அறியக்கூடிய வகையில், அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அமைய உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தின் மாதிரி வடிவமைப்பு pic.twitter.com/1kYcOrzjEq
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 24, 2021