3D இல் முக்காலா முக்காபுலா..!

3D இல் முக்காலா முக்காபுலா..!

Share it if you like it

1994 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா மற்றும் நக்மா ஆகியோர் நடித்து வெளியான திரைப்படம் காதலன். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிந்த அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம். அதில் இடம்பெற்றிந்த முக்காலா முக்காபுலா என்ற பாடல் மீண்டும் 3D யில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் வருண் தவான் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடிப்பில் ‘ஸ்ட்ரீட் டான்சர்’ என்ற திரைப்படம் 3D யில் உருவாகி வருகின்றது. இது நடனத்தை மைய கருவாக கொண்டத் திரைப்படம் என்பதால் நடனப்புயல் பிரபுதேவாவை கொண்டு முக்கலா பாடலை 3D யில் உருவாக்கியுள்ளனர். பிரபுதேவாவுடன் வருண் தவான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் இணைந்து நடனம் ஆடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Share it if you like it