கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் வீட்டு மனை வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாகவும் அதில் கர்நாடகா முதல்வரின் மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி கர்நாடகாவில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது.
மைசூரு நகர மேம்பாட்டு வாரியம் சார்பில், நிலம் கையகப்படுத்தப்பட்டு, வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு, குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அங்கு மனை பெற பயனாளிகள் விண்ணப்பித்தால், அவர்களுக்கு குறைந்த விலையில் மனைகள் வழங்கப்படும்.
ஆனால், இந்த வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்வதில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக பாஜக தலைவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதையடுத்து, மைசூரு நகர மேம்பாட்டு வாரியத்தின் கமிஷனர் தினேஷ்குமார் மற்றும் சில அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கும், மைசூரு நகர மேம்பாட்டு வாரியம் நிலம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் முதல்வர் சித்தராமையா அந்த நிலத்தை தாய் வீட்டு சீதனமாக தன் மச்சான் தந்ததாக சப்பை கட்டு கட்டியுள்ளார்.வால்மீகி மேம்பாட்டு வளர்ச்சி ஆணையத்தில் 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ள நிலையில், மைசூரு நகர மேம்பாட்டு வாரியத்தில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது.குற்றச்சாட்டுக்கு ஆளான அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யாமல், பணியிட மாற்றம் செய்தது ஏன்? முதல்வர், யாரை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.
இந்த பிரமாண்ட முறைகேட்டை சி.பி.ஐ.விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை நியமித்து என்ன பயன்?முதல்வர் மனைவிக்கு நிலம் கொடுக்க அனுமதி வழங்கியது யார். முதல்வரின் சொந்த ஊரில், முதல்வரின் ஆதரவு அமைச்சரின் துறையில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்துள்ளது. இதில் முதல்வரின் பங்களிப்பு இல்லாமல் இருக்குமா? கோல்மால் சி.எம்., இவர். இவ்வாறு அசோக் பதிவிட்டுள்ளார்.