5 மாநில தேர்தல் LIVE UPDATES

5 மாநில தேர்தல் LIVE UPDATES

Share it if you like it

5 மாநில தேர்தல் முடிவுகள் 2022 UPDATE: உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்கிறது; கோவா, மணிப்பூரில் முன்னிலை: பஞ்சாப்பில் காங்கிரஸ் படுதோல்வி.

உத்தரபிரதேசம்

பா.ஜ.க – 272

சமாஜ்வாதி – 136

காங்கிரஸ் – 01

மற்றவை – 02

உத்தரபிரதேச மாநிலத்தின் கைரானா தொகுதியில் வசிக்கும் ஹிந்துக்களுக்கு வன்முறை அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றச்சாட்டிற்குள்ளான சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் நஹித் ஹசன், பாஜக வேட்பாளர் மிருகங்கா சிங்கை விட குறைவான வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளனர். – 03:20 pm

“எங்கள் ஆட்சிதான் அமையும் என்று எங்களுக்கு முன்பே தெரியும்… புல்டோசரின் முன்பு எது வந்தாலும் ஒரு நிமிடத்திற்குள் தகர்ந்துவிடும்” – பாஜக எம்.பி. ஹேமமாலினி – 02.05 pm

அயோத்தி, வாரணாசி, மதுரா ஆகிய 18 தொகுதிகளில் பாஜக 14 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வாரணாசி மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் பாஜக 7ல் முன்னிலை பெற்றுள்ளது. – 1:25 pm

பஞ்சாப்

பா.ஜ.க – 05

ஆம்ஆத்மி – 90

காங்கிரஸ் – 17

மற்றவை – 01

பஞ்சாப் காங்கிரஸ் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வி. பாதார்,சாம்கவுர் சாகேப் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். – 03:10 pm


மணிப்பூர்

பா.ஜ.க – 31

காங்கிரஸ் – 06

மற்றவை – 06

உத்தராகண்ட்

பா.ஜ.க – 47

ஆம்ஆத்மி – 00

காங்கிரஸ் – 19

மற்றவை – 04

லால்குவா தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். – 02:15 pm

ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) உத்தரகாண்டில் மீண்டும் 44 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 70 இடங்கள் கொண்ட சட்டசபையில் தேவையான பெரும்பான்மையை விட 8 தொகுதிகளில் முன்னிலை.

கோவா

பா.ஜ.க – 20

ஆம்ஆத்மி -03

காங்கிரஸ் – 12

திரிணாமுல் காங்கிரஸ் – 02

மற்றவை – 04

கோவா : கோர்டலிமில் தொகுதியில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் மானுவல் வாஸ் மற்றும் கர்டோரிமில் இருந்து வெற்றிபெற்ற அலெக்சியோ ரெஜினால்டோ ஆகியோர் பாஜகவுக்கு ஆதரவளிக்கின்றனர்.

பிச்சோலிம் தொகுதியில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் டாக்டர் சந்திரகாந்த் ஷெட்டியே பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார்.





Share it if you like it