பனைமரம் ஏறுபவர்களின் குழந்தைகளில் சுமார் 58 சதவீதம் பள்ளிகூடங்களுக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் அவர்களுக்கு பள்ளிகளுக்கு செல்வதற்கான போக்குவரத்துக்கு வசதி மற்றும் வீட்டில் மின்சார வசதி இல்லை. இதனால் புலம்பெயர்ந்த பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மறுக்கப்படுவதால் குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதாக அறிக்கை ஒன்றை மணிலா பனைத்தொழிலாளர்கள் மட்டும் கைவினைஞர்கள் சங்கம் (எம்பிஎம்கேஎஸ்) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக மணிலா பனைத்தொழிலாளர்கள் மட்டும் கைவினைஞர்கள் சங்கத்தின் பொது செயலாளர் சுப்பையா அவர்கள், பனைமரம் ஏறுபவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தைத் நடத்த, உள்ளூர் கடன் வழங்குவோரிடம் கடன் வாங்க வேண்டியுள்ளது. இதன் மூலம், தங்கள் பொருட்களை, கடன் வழங்குவோரிடம் குறைவான விலையில் விற்று அதை வாங்குபவர்கள் வெளியே அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கின்றனர். ஆண்கள் சாறு சேகரிக்கச் செல்லும்போது, பெண்கள் பனை வெல்லம் செய்கிறார்கள், குறைந்த விலை காரணமாக வெள்ளை சர்க்கரை வெல்லம் மெதுவாக மாற்றப்படுகிறது. இது தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சாயல்குடியைச் சேர்ந்த கே.தமிழ்செல்வி, நாங்கள் வாங்கிய கடனை இப்போது திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கிறோம். என் குழந்தைகளை கிராமத்தில் உள்ள என் தாயின் இடத்தில் தங்க வைத்தேன். ஆனால் அவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கு செல்ல 6 கி.மீ. செல்ல வேண்டும். அது, என் தாய்க்கு கடினமாக இருந்தது; அதனால் அவர்களைப் பள்ளிக்கு செல்லாமல் நிறுத்திவிட்டதாக திருமதி தமிழ்செல்வி கூறினார்
ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான பருவத்தில், பனைமரத் தொழிலாளர்கள் ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை குடும்பத்துடன் பனை மரக்காடுகளுக்குச் செல்வார்கள். இவர்களுக்கு இந்த பண்ணைகள் சொந்தமாக இல்லாததால், கூலித்தொழிலாளிகளாக இந்த வேலைகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் தங்கள் கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டதால், அவர்களுக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை, அவர்களின் குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறவும், பணம் சம்பாதிப்பதில் பெற்றோருக்கு உதவும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மூன்று முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகள், அங்கன்வாடிகளுக்கு செல்லும் அணுகல் இல்லாததால், அவர்கள் ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பக் கல்வியை இழக்கின்றனர் என்று அறிக்கை கூறுகிறது.
“எங்கள் பிள்ளைகள் தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அரசு எங்களுக்கு சூரிய ஒளி விளக்குகள், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று திரு. சுப்பையா கூறினார். பனை வர்த்தகப் பூங்காக்கள் அமைப்பது, தொழிலாளர்களுக்கு விரிவான உரிமம், பனைப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை எம்பிஎம்கேஎஸ் முன்வைத்தது, மேலும் பனைமரம் ஏறுபவர்களுக்கு வங்கிகள் கடனுதவி வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்று சுப்பையா அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.