மோடி அரசின் 7 ஆண்டு சாதனை ( பகுதி – 3 ) – GST மற்றும் கருப்பு பண ஒழிப்பு

மோடி அரசின் 7 ஆண்டு சாதனை ( பகுதி – 3 ) – GST மற்றும் கருப்பு பண ஒழிப்பு

Share it if you like it

பொருளாதார வளர்ச்சி திட்டம்
1. கருப்பு பண ஒழிப்பு
2. GST வரி சட்டம்

ஒரு நாட்டின் முதுகெலும்பு பொருளாதார வளர்ச்சி ஆகும். இந்தியாவின் பொருளாதாரம் 2014ஆம் ஆண்டுக்கு முன்பு மிக மோசமான நிலைமையில் இருந்தது. பாரத பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி அவர்கள் ஆட்சி அரியணை ஏறிய பிறகு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி பெற செய்தது. பொருளாதார வளர்ச்சிக்காக பல சட்டத்திட்டங்களை அமல்படுத்தினார். இந்த திட்டத்தின் மூலம் அடித்தட்டு மக்களை மேலே உயரச் செய்தார். நாட்டிற்கும் இந்த திட்டத்தின் மூலம் அதிகமான ஏற்றுமதிகள் சரியான வரி வசூலினால் அரசாங்கத்திற்கு பெறும் லாபம் கிடைக்க வழிவகைச் செய்தார்.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக GST வரியை அமல்படுத்தினார். இந்த சட்டத்தின் மூலம் அனைத்து கணக்குகளும் வங்கியின் கீழ் கொண்டுவரச் செய்தார். இதன் மூலம் வரி செலுத்தாதவர்கள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் தானே முன்வந்து உண்மையை சொன்னால் தண்டனையில் இருந்து தப்பலாம் என்பது போன்ற சலுகைகள் மூலம் கறுப்புப்பணம் வெளிகொண்டுவரப்பட்டது அணைத்து கருப்பு பணமும். அதனை முற்றிலுமாக முடக்க பண மதிப்பிழப்பை கொண்டு வந்து அனைத்தும் வங்கியின் கீழ் கொண்டுவரச் செய்தார். இதன் மூலம் நாட்டின் வரி செலுத்தும் கணக்கு அதிகமாகியது. 2014 ஆண்டுக்கு முன் இருந்த ஆட்சியில் 3.8 கோடி பேர் மட்டும்தான் வரி செலுத்தினார்கள். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு GST சட்டத்தின் மூலமாக சுமார் 6.8 கோடி பேர் வரி செலுத்தினார்கள். இந்த சட்டத்தின் மூலம் கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் தவறு முற்றிலுமாக குறைக்கப்பட்டது.

செல்ஃப் கம்பெனி என்பது முகவரி இல்லாத கம்பெனி ஆகும். ஒருவர் பெயரில் தொழிற்சாலை இருப்பது போல அரசாங்கத்திடம் அந்த தொழிற்சாலைக்கான முகவரியைக் கொடுத்து அதற்கான பொய்யான கணக்குகளை அரசாங்கத்திடம் கொடுப்பது. ஆனால் அந்த முகவரியில் அங்கு தொழிற்சாலையே இருக்காது. இதுபோன்ற பொய்யான கணக்குகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பிப்பது இதனால் அரசாங்கத்திற்கு பல வகையில் நஷ்டம் ஏற்பட்டது. இந்த GST சட்டத்தின் மூலம் இந்த பொய்யான முகவரி இல்லாத தொழிற்சாலைகள் கணக்கு முடக்கப்பட்டது. இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை சூடு பிடித்தது. பொருள் வாங்குபவரும், விற்பவரும் எல்லா கணக்கும் வங்கி கணக்கின் கீழ் கொண்டு வரப்பட்டது.

ரூபிய (Rupay) கார்டு 2012 மார்ச் 5ஆம் தேதி மன்மோகன் சிங் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டாலும் மோடி மூலம்தான் தீவிரம் அடைந்தது. இதனால் வெளிநாட்டுக்கு போகும் பணம் தடுக்கப்பட்டது.

தப்பித்து ஒடும் பொருளாதார குற்றவாளிகள் சட்டம். 2018 ஏப்ரல் 22ல் இந்த சட்டம் மூலம் நீரவ் மோடி, விஜய மல்லையா உலகில் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடி மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

அகஸ்டா வெஸ்லாண்டு ஒப்பந்தம் இதில் கிரிஸ்டியண் பிகேல், ராஜி சக்ஸ்சேனா இவர்களை தப்பித்து ஓடும் பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் மூலம் துபாயிலிருந்து கொண்டு வந்து இந்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வாறாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெற பலவகை சட்டத்திட்டங்களை அமல்படுத்தியவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆவார். இந்த திட்டத்தை சில அரசியல் கட்சிகளும், ஊடங்கங்களும் தங்கள் சுயலாபத்திற்காக மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை கொண்டு சேர்ப்பது மிக வருத்தத்திற்குரிய செயலாகும். ஆனால் இதனை மக்கள் நல்லமுறையில் புரிந்துகொண்டு இந்த சட்டத்திற்கு பெரும் ஆதரவு தருகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.


Share it if you like it