மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த கட்சியினர் பெரியளவிலான வன்முறையில் ஈடுபட்டனர்.
பல்லாயிரக்கணக்கானோர் தாக்கப்பட்டனர்,
மேற்கு வங்க வன்முறை தொடர்பாக சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பெர்மோத் கோஹ்லி தலைமையிலான உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியது.
ஆயிரக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன, பல குடும்பங்கள் மிரட்டப்பட்டுள்ளன. பாஜகவுக்கு வாக்களித்த கிராமத்திற்கு செல்லும் பாலம் தகர்க்கப்பட்டது, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இது எல்லாவற்றையும் விட அதிர்ச்சி தகவலாக, 7000க்கும் அதிகமான பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் வடிவம், ஆனால் மேற்கு வங்கத்தில் 7000 பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர். இது நம் நாட்டிற்கே அவமானம். இது எங்கோ மேற்கு வங்கத்தில் நடந்தது என்று, உதாசீனம் செய்ய முடியாது.
பாதிக்கப்பட்டவர்கள் நமது சகோதரிகள். இந்நிகழ்வுகள் தேசப்பிரிவினையின் போது பாகிஸ்தானிய கயவர்கள் நடத்திய கொடூரத்தை நினைவூட்டுகிறது. இதை ஒரு சாதாரண சம்பவமாக கருத முடியாது.
உச்சநீதிமன்றம் இந்த விஷயத்தை தாமாக முன்வந்து விசாரித்து, கயவர்களுக்கும், அவர்களுக்கு துணை போன அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்