7500 கோடி, இந்தியா வசம் இலங்கை – சீனா தனிமை

7500 கோடி, இந்தியா வசம் இலங்கை – சீனா தனிமை

Share it if you like it

கொரோனா

தாக்கத்தால் இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு அன்னியச் செலாவணி கையிருப்பும் குறைந்தது இதனால் தர நிர்ணய நிறுவனமான, மூடிஸ், சமீபத்தில், இலங்கையின் கடன் தகுதியை குறைத்தது.

இதனை சரி செய்யும் விதமாக இலங்கையின் மூலதனச் சந்தைகள் துறை இணையமைச்சர் அஜித் நிவர்டு கப்ரால் இந்திய ரிசர்வ் வங்கியிடம், ஜூலை மாதம், அன்னியச் செலாவணி பரிமாற்ற ஒப்பந்தம் செய்து அதன் அடிப்படியில் ஏற்கனவே 3,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு, அமெரிக்க டாலர்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. தற்போது, மேலும், 7,500 கோடி ரூபாய் மதிப்பிற்கு, டாலர்களை வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்தொகையானது வரும், 2022 நவம்பருக்குள் தற்போதைய ரூபாய் மதிப்பின் அடிப்படையில், இலங்கை அரசு திரும்ப வழங்கி விடும்.இவ்வாறு, அவர் கூறினார். வழக்கமாக சீனா இந்தியாவை சுற்றி உள்ள நாடுகளுக்கு கடன்வழங்கி அவற்றை தன் இஷ்டத்துக்கு ஆட்டி வைத்தது ஆனால் தற்பொழுது இலங்கையே தானே முன்வந்து இந்தியாவிடம் உதவி கேட்பது, சர்வதேச அளவில் சீனாவை இந்தியா தனிமைப்படுத்தி இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது.


Share it if you like it