777 சார்லி திரைப்படத்தை பார்த்து விட்டு கர்நாடக முதல்வர் கதறி அழுத புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.
கன்னடத் திரைப்பட சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ரக்ஷித் ஷெட்டி. இவர், நடித்த திரைப்படம் 777சார்லி. இப்படத்தினை, பிரபல இயக்குனர் கிரண்ராஜ் இயக்கியுள்ளார். கடந்த ஜீன் 10-ம் தேதி வெளியிட்டப்பட்டது. நன்றிக்கு பெயர் போன நாய்க்கும் மனிதனுக்கும் இடையில் நடைபெறும் ஒரு பாச போராட்டமே இதன் சாராம்சம் என்று கூறப்படுகிறது. இப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. அந்தவகையில், மலையாளப் பதிப்பை நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான பிருத்விராஜ் விநியோகிக்கிறார். அதேபோல, இதன் தமிழ் பதிப்பை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் பேனரில் கார்த்திக் சுப்புராஜ் விநியோகம் செய்கிறார்.
வீட்டில் செல்ல பிராணியாக நாய்களை வளர்க்கும் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. அந்தவகையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கர்நாடக மாநில முதல்வருமான பசவராஜ் பொம்மை இப்படத்தினை நேற்றைய தினம் திரைப்பட குழுவினருடன் பார்த்து விட்டு கண் கலங்கிய புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கடந்த பல மாதங்களுக்கு முன்பு முதல்வரின் செல்ல பிராணி திடீர் என இறந்ததே இதற்கு காரணம். 777 சார்லி முதல்வரின் பழைய நினைவுகளை தூண்டி விட்டுள்ளது என்பதை அவரின் அழுகையின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.