விசுவ ஹிந்து பரிஷத் தென்தமிழக மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஆகஸ்ட் 10,11 ஆகிய இரண்டு நாட்கள் தஞ்சாவூரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அகில பாரத இணைச் செயலாளர் ஸ்ரீ வெங்கடேஸ்வரன், தென்தமிழக மாநில தலைவர் ஸ்ரீ.மு.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் வழக்கறிஞர் .ஸ்ரீ.லட்சுமண நாராயணன், மாநில இணை செயலாளர் ஸ்ரீ.செந்தில் முருகன் ஆகியோர் பத்திரிக்கையாளரை சந்தித்து செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்களை எடுத்துரைத்தனர். செயற்குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானங்கள் பின்வருமாறு :-
தீர்மானம்: 1
வங்க தேசத்தில் வங்கப்பிரிவினையின் போது பாடுபட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த 30% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுத்தி மாணவர்கள் நடத்திய போராட்டமானது. ஹிந்துக்களுக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது அங்குள்ள ஹிந்துக்களை நிர்வாணப்படுத்தி அடித்து கொன்றுள்ளனர் ஹிந்து பெண்களை கற்பழித்து சித்திரவதை செய்துள்ளனர். மேலும் ஹிந்து கோவில்களை அடித்து நொருக்கி அட்டூழியம் செய்துள்ளனர். ஹிந்துகளின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டது. ஜிஹாதிகள் பாலஸ்தீன- இஸ்ரேல் போரிலே பாலஸ்தீனத்திற்கு குரல் கொடுத்த பாரதிய அரசியல்வாதிகள் பக்கத்திலே நடக்கும் வங்க தேசத்தில் பாதிக்கபட்ட ஹிந்துக்களுக்க ஆதரவாக குரல் கொடுக்காதது ஹிந்துக்கள் மத்தியில் கடும் நடவடிக்கை எடுத்து வங்கதேச ஹிந்துக்களை பாதுக்காக்க வேண்டும் என இந்த கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 2
உலகத்திலேயே அதிக அளவில் பக்தர்கள் கூடும் இடமாக கும்பமேளா திகழ்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு 2025 மகர சங்கராந்தி வருடம் தை 1 தேதி அன்று தொடங்கி மாசி மகா சிவராத்திரி அன்று நிறைவு பெறுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருவார்கள். தமிழகத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த திரிவேணி சங்கமத்தில் புனித நீராட செல்வார்கள். எனவே தெற்கு ரயில்வே இப்பொழுது இதற்காக தன்னை தயார் செய்து சிறப்பு ரயில்களை இயக்கி பக்தர்களின் பயண சிரமத்தை குறைக்க வேண்டும் என விசுவ ஹிந்து பரிஷத் தென் தமிழகம் வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 3
கள்ளகுறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்டோர் உயிர்ரிழந்த விவகாரம் ஒட்டு மொத்த தேசத்தையே உலுக்கியுள்ளது. தமிழக அரசு இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கையை எடுக்கவில்லை. ஏனெனில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த பகுதியில் விஷ சாராயம் குடித்து உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதை பொருட்கள் எளிதாக இளைஞர்கள் கையிலே கிடைக்கின்றது. இளைஞர்கள் போதையிலே அடிமைப்பட்டு கிடக்கின்றனர். இதனால் சிறு வயதிலேயே உயிர் இழப்பு, ஆண்மை குறைவு, கொலைகள், கொள்ளைகள் நடந்து வருவது மிகுந்த கவலை அளிக்கின்றது. போதை பொருள் நடமாட்டத்தை தமிழக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். போதையில்லா தமிழகத்தை உருவாக்க பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்பு எடிக்க வேண்டுமாய் இந்த செற்குழு தமிழக அரசை வலியுறுத்துகின்றது. இதற்கு தமிழக அரசு மட்டுமல்ல நமது குடும்பங்களும் வழிக்காட்டியாக திகழவேண்டும்.
தீர்மானம்: 4
பெண்களின் சபரிமலை என போற்றப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரஸ்தி பெற்ற மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் மேற்கூரை தீப்பிடித்து எரிந்து சுமார் இரண்டு வருடம் ஆகியும் இன்னும் மேற்கூரை அமைக்கும் பணி முழுமை பெறாமல் பகவதி அம்மன் வெயிலிலும் மழையிலும் இருக்கின்றாள். டெண்டர் எடுத்தவர் ஆமை வேகத்தில் இந்த பணியை செய்து வருகின்றார். துறையின் அமைச்சர் நேரில் பார்வையிட்டும் கூட இன்னும் பணிகள் முழுமை பெறவில்லை. மேலும் ஆலய வளாகத்திற்குள் பக்தர்கள் செல்ல முடியாமல் கடைகள் அடைத்து கடைக்காரர்கள் வளாகத்தை ஆக்கிரமித்து உள்ளனர். எனவே ஹிந்து சமய அறநிலையத்துறை மேற்கூறை அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிடும் மாறும் ஆலய வளாகத்திற்குள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றி பக்தர்கள் நிம்மதியாக ஆலயத்தில் பிரதட்சணம் செய்வதற்கு ஏற்பாடு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க ஹிந்து சமய அறநிலையத்துறையை இந்த கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 5
தமிழகத்திலே திருக்கோவில்களில் சாதிய பிரச்சனைகள் மற்றும் தனிநபருக்கான பிரச்சனைகளை வருவாய் துறையும் காவல்துறையும் இணைந்து திருக்கோவில்களில் பூஜை நடத்த விடாமலும் திருக்கோயிலுக்கு சீல் வைத்து பக்தர்களை சாமி தரிசனம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றமும் அதன் மதுரை கிளையும் திருக்கோவிலை சீல் வைக்கவோ பக்தர்கள் வழிபாடு செய்ய விடாது தடுக்கவோ அரசுக்கோ அதிகாரிகளுக்கு உரிமை இல்லை என பல திருக்கோயில் சார்ந்த வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. எனவே தமிழக அரசு தமிழகம் முழுவதும் இது போன்ற பிரச்சனைகளால் பூட்டப்பட்டிருக்கும் திருக்கோயில்களை உடனடியாக திறந்து பக்தர்கள் வழிப்பாட்டிற்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு இந்த கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம்: 6
தமிழகத்தில் திருக்கோவில்களின் நிதிகள் திருக்கோவிலின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அலுவலக கட்டிடம் கட்டவும், தங்களின் பயன்பாட்டிற்க்கு வாகனங்கள் வாங்கவும் அலுவலக கூட்டத்தை அறநிலையத்துறை கட்டிடத்தில் நடத்தாமல் ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஹோட்டல்களில் நடத்தியும் தேவையில்லாத செலவுகள் செய்தும் தங்கள் சொந்த உபயோகத்திற்கு திருக்கோவில்களின் வாகனங்களை பயன்படுத்தியும் வருகின்றனர். இதனால் பக்தர்கள் திருக்கோவில் உண்டியல்களில் இடும் கணிக்கை முறைகேடாக இவர்களால் பயன்படுத்தப்படுகிறது. எனவே வரும் காலங்களில் திருக்கோவில்களின் நிதியை முறைகேடாக பயன்படுத்தாமல் கூட்டங்கள் நடத்திட ஹிந்து சமய அறநிலையத்துறையை இந்த கூட்டம் வலியுறுத்துகின்றது.
தீர்மானம்: 7
ஹிந்து சின்னங்கள் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கைக்கு கண்டனம் பள்ளி மாணவ மாணவியர் அணியும் ஹிந்து மத சின்னங்களை தடை செய்யும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் அறிக்கை விசுவ ஹிந்து பரிஷத் கண்டனம் தெரிவிக்கிறது. இந்த அறிக்கை ஹிந்து சின்னங்களை மட்டுமே குறி வைத்துள்ளது. மற்ற மத அடையாளங்களை தடை செய்வது பற்றி பேசவில்லை. அதை அப்படியே செயல்படுத்த அரசு திட்மிட்டால் என்றால் விசுவ ஹிந்து பரிஷத் மாநிலம் தழுவிய போராட்டங்களை கையில் எடுக்கும் என தீர்மானித்து உள்ளது.
தீர்மானம் : 8
தமிழக கிறிஸ்தவ ஆலய பராமரிப்புக்கான மானியங்கள் நிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பழுது மற்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள கிறிஸ்தவ தேவ ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழக அரசு ஜூலை 1.2024 அன்று ஓர் அறிவிப்பை வழங்கியது. அந்த உத்தரவை விஎச்பி கண்டிக்கிறது. கிறிஸ்தவ தேவாலயங்கள் அரசுக்கு எந்த வரியையும் செலுத்துவதில்லை. அப்படி இருக்க ஒரு மதச்சார்பற்ற அரசாங்கம் எப்படி தனியார் கிறிஸ்தவ தேவ ஆலயங்களுக்கு பொது பணத்தை செலவிட முடியும். இல்லை எனில் தமிழ்நாடு அரசு அனைத்து தேவாலயங்களையும் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். அல்லது இந்த நிதி உதவி உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இது யாருடைய தந்தை பணம்? பொதுப்பணத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் பராமரிக்கப்படாத ஹிந்து கோயில்களுக்கும் அதைப்போல தொகையை தமிழ்நாடு அரசு செலவிடவும் விசுவ ஹிந்து பரிஷத் நீதிமன்றத்தை நாட உள்ளது என்று விசுவ ஹிந்து பரிஷத் தீர்மானிக்கப்படுகிறது.