அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்வு – தமிழக அரசு !

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்வு – தமிழக அரசு !

Share it if you like it

கடந்த 2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்குபவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த் 1.1.2024 முதல் அகவிலைப்படியை 9 சதவீதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ என்ற குறியீடு மூலம்தான் கணக்கீடு செய்யப்படுகிறது.

இந்த புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்தால் அதன் சராசரியை வைத்து அகவிலைப்படி உயர்வு கணக்கீடு செய்யப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை குறைந்து வந்த இந்த புள்ளிகள் தற்போது வேகமாக உயர தொடங்கி உள்ளது. இந்த குறியீடு ஜனவரியில் 132.8 என்ற அளவில் இருந்தது.

அதன்பின் ஏற்ற இறக்கமாக புள்ளிகள் சென்று கொண்டு இருந்தன நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து புள்ளிகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கி உள்ளன. முன்னதாக கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயரும் என்றும் இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2 ஆயிரத்து 846 கோடியே 16 லட்ச ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். ஜனவரி முதல் மே வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *