1961 நவம்பரில் “ராமன் அயோக்கிய சிகாமணிதான், சீதை சோரம் போனவளே! விபீஷணன் காட்டி கொடுத்த துரோகி! இராவணன் ஒரு வீரன், கிருஷ்ணன் காமுகன்” இது தான் பெரியாரின் கருத்து என்பதாக அண்ணாதுரை பத்திரிகையில் எழுதினார்.
அண்ணாதுரை எழுதியது போல் சுமார் 20 வருடத்திற்கும் மேல் இந்துக்களின் கடவுளை நிந்தனை செய்து பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார் ஈ.வே.ரா. கடவுளை நம்பினோரை “முட்டாள், காட்டுமிராண்டி, அயோக்கியன்” என்று கடும் சொற்களால் திட்டினார்.
பொறுமை இழந்த வாரியார் சுவாமிகள் “தமிழ்நாட்டில் பெரியார் என்றொரு நச்சு ஆறு ஓடுகிறது” ராமர் படத்தைச் செருப்பால் அடிப்பது, பிள்ளையார் சிலையை உடைப்பது, இராமாயணம், போன்ற நூல்களைக் கொளுத்துவது, போன்ற காரியங்களில் ஈ.வே.ரா ஈடுபட்டுள்ளார் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார் வாரியார் சுவாமிகள்.
இதற்கு அண்ணாதுரை சுவாமிகளை கண்டித்துக் கட்டுரை ஒன்றை எழுதினார்..
உம்முடைய ஓட்டைப் படகிலேறி அந்த ஆற்றைக் கடக்க நினைக்காதீர்….ஜாக்கிரதை….. ஆபத்தை அணைத்துக் கொள்ளாதீர், பின்னர் போச்சே பிழைப்பு என்று மனம் கரையாதீர்! சுயமரியாதை சக்தியோடு மோதிக் கொள்ள வேண்டாம் என்று எழுதிருந்தார்.
அக்கட்டுரையில் நான் “அதை தடுக்க முடியாது” என்ற வரிக்கு “தாக்குதல் நடத்த ஆட்கள் தயாராக இருக்கிறார்கள்” என்பது தான் அர்தம்! இப்படி வன்முறையைத் தூண்டும் கட்டுரைகள் அந்தக் கால திராவிட இயக்கத்தின் இதழ்களில் சர்வ சாதாரணமாக வெளி வரும், அண்ணாதுரை 1969-ல் காலமாகி விட்டார்.
நெய்வேலியில் ஒரு ஆன்மீகக் கூட்டம். எப்போதும் “வாழ்கை நிலையில்லாதது” என்பதை மையமாக வைத்து வாரியார் சுவாமிகள் பேச்சு அமையும். அன்றும் அப்படியே பேசினார்.”விதி வலிமையுடையது ஊழ்வினையை வெல்ல முடியாது”! என்று குறிப்பிட்டார். “கில்லர் வந்து விட்டால் மில்லரே வந்தாலும் பயன்படாது” என்று பேசி இருந்தார் சுவாமிகள்.
“மில்லர்” என்பவர் புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர். அண்ணாதுரைக்குச் சிகிச்சை அளித்தவர். அண்ணாதுரையை தான் வாரியார் கிண்டல் செய்துள்ளார் என்று வதந்திகள் பரவின. இதனை அடுத்து வன்முறைக் கும்பல் ஒன்று வாரியாரைச் சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கியது. வாரியார் வழிபடும் விக்ரகங்கள் வீசி எறியப்பட்டன. காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் வாரியார் சுவாமிகள் காப்பாற்றப்பட்டார்.
ஒரு சொல்லுக்கு ஒரு மணி நேரம் விளக்கம் சொல்லும் ஆற்றலுடையவர். வேதாந்தம், சித்தாந்தம், போன்ற நூல்களிலிருந்து பல்லாயிரம் பாடல்களை மனப்பாடமாகச் சொல்ல வல்லவர் சுவாமிகள். ஐந்தெழுத்தும், திருநீறும், கண்டிகையும் பொருளாகக் கொண்ட பெரியவர்.
பொருள் பற்றைத் துறந்து அருள் பற்றை மட்டுமே பற்றி. வந்த பொருளையெல்லாம் வறியவர்களுக்கும், திருப்பணிக்களுக்கும், வாரி வாரி வழங்கியவர். கம்பரும், கச்சியப்பரும், ஒருங்கே வந்தவர் போல் அருளுருவாய் நடமாடிக்கொண்டிருந்த தமிழ் முனிவர்.
வாரியார் சுவாமிகள் தாக்கப்பட்டதால் நல்லோர் பலரும் கண்ணீர் சிந்தினர். ராஜாஜி மனம் வருந்தினார், பக்தவச்சலம் கண்டித்தார், கி.வா.ஜகந்நாதன், குமரி அனந்தன், ஆகியோர் சுவாமிகளை நேரில் சந்தித்து பேசினர். சட்டமன்றத்தில் உறுப்பினர் விநாயகம் கடும் கண்டனம் தெரிவித்தார். ஒத்திவைப்புத் தீர்மானமும் கொண்டுவந்தார்.
மா.பொ.சி, எம்.ஜி.ஆர், வருத்தம் தெரிவித்தனர். ஒருவர் மட்டும் வாரியார் தாக்கப்பட்டது சரிதான் என்று எழுதினார். அவர் தான் ஈ.வே.ரா. “யோகியமற்ற கூப்பாடுகள்” என்ற தலையங்கத்தில் வாரியார் சுவாமிகளைப் பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார்…..
– ஆக்கம் ஜீ. சிவக்கலை
வாழ்த்துக்கள் சிவகலை….