மே.வங்கத்தில் விஸ்வரூபம் எடுத்த பாஜக – இதுவே காரணம்..!

மே.வங்கத்தில் விஸ்வரூபம் எடுத்த பாஜக – இதுவே காரணம்..!

Share it if you like it

மேற்கு வங்கம் இந்தியாவின் முக்கியமான அங்கம் அது..! டெல்லி சுல்தான் ஆட்சி, முகலாயர் ஆட்சி, ஆங்கிலேயர்களின் ஆட்சி என ஆக்கிரமிப்பாளர்களின் ஆட்சி துவங்கி இன்று மம்தாவின் ஆட்சி வரை ஆயிரம் ஆண்டுகளாக அந்த மண் நல்லாட்சி என்பதை பார்த்ததே இல்லை…!

ஒவ்வொரு முறையும் நல்லவர் என நம்பி தேர்தெடுத்தவர்கள் நெஞ்சில் குத்திய கதை இங்கு ஏராளம்.. 1977ல் இருந்து 2011 வரை சுமார் 35 ஆண்டுகள் கம்யூனிஸ்டுகளின் ஆட்சியில் சிக்கி தவித்தது இந்த மாநிலம். ஜனநாயக படுகொலை நிகழ்ந்துவந்தது. மக்கள் தேர்ந்தெடுத்த அரசு தானே பின்னர் எப்படி ஜனநாயக படுகொலை ஆகும் என சிலர் கேட்பார்கள்… இதுவரை மேற்கு வங்கத்தில் சுமார் 55,408 அரசியல் படுகொலைகள் நிகந்துள்ளது. ஒரு கொலை செய்ய இரண்டு பேர் என்றாலும் குற்றவாளிகளின் எண்ணிக்கை சுமார் 1,00,000த்தை தாண்டும். அவர்களின் மீது எவ்வித வழக்கும் பதியப்பட்டது இல்லை. சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். இப்படி அடுத்த சித்தாந்தத்தை வளரவிடாமல், மாற்று சிந்தனையை நோக்கி மக்கள் நகர்ந்தால் கொலை செய்யப்படுவீர்கள் என்பது போன்ற அச்ச உணர்வை ஏற்படுத்தி ஆட்சியை தக்கவைத்ததற்கு ஜனநாயக படுகொலை என்று தான் பெயர்வைக்க முடியும்.

அத்திப்பட்டி போல் ஒரு தீவையே அழித்த மரிச்சபி படுகொலை, நடுரோட்டில் வைத்து 18 சாதுக்களை எரித்து கொன்ற அனந்தமயி படுகொலை, கட்சியில் இணைய மறுத்த 11 விவசாயிகளை கொன்ற நனூர் படுகொலை, போராடிய விவசாயிகளை கொன்ற நந்திகிராம் படுகொலை, மகன்களை கொன்று அவர்களின் ரத்தத்தை பெற்ற தாய்க்கு ஊட்டிய செய்ன்பாரி படுகொலை என இவர்களின் கொடூரங்களை பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம்…

இந்த கொடுமைகளை கண்டு சகிக்க முடியாத மக்கள், வாணனில் இருந்து தப்பி அடுப்பில் விழுந்த கதையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிடம் மாட்டிக்கொண்டார்கள், முன்பு சொன்ன படுகொலைகளுக்கு கொஞ்ஜமும் சளைக்காமல் பாஜக உறுப்பினர்களை தொடர் படுகொலை செய்து வந்தது திரிணாமுல் காங்கிரஸ். பாஜகவை சேர்ந்த ஒரு ஆசிரியரை அவரது குழந்தை, மனைவியுடன் சேர்த்து குடும்பத்தோடு கொன்றது போன்ற சுமார் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் பாதக கொலை செய்யப்பட்டுள்ளனர்

போதும் இந்த கொடுமைகள் என வெகுண்டெழுந்த மக்கள், அதன் பிரதிபலிப்பை 2019 நாடாளுமன்ற தேர்தலில் காட்டினார். 42 தொகுதிகளில் வெறும் இரண்டு எம்.பிக்களை மட்டும் கொண்டிருந்த பாஜகவுக்கு சுமார் 18 தொகுதிகளை அள்ளிக் கொடுத்தனர். அப்போதிலிருந்து மேற்கு வங்கத்தில் புதிய சகாப்தம் துவங்கியது… பாஜக விஸ்வரூப வளர்ச்சி அடையத் துவங்கியது. கிட்டத்தட்ட 60,00,000 உறுப்பினர்கள் அக்கட்சியில் சேர்ந்தனர் குறிப்பாக மம்தாவுக்கு வலது கரமாக திகழ்ந்த சுவேந்து அதிகாரி கடந்த சில மாதங்களுக்கு முன் அமித் ஷா முன்னிலையில், பாஜகவில் இணைந்தார். பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இது போல் மாற்று கட்சியை சேர்ந்த பல முக்கியத் தலைவர்களும் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது.

தற்போது போதிய வளர்ச்சி இல்லாமல் பின்தங்கி இருக்கும் மேற்கு வங்க மக்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் நடக்கும் பாஜக ஆட்சியின் வளர்ச்சி திட்டங்கள் திருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில ஆளுங்கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்தின் வளர்ச்சிக்கு இதுவரை எந்தவொரு சிறந்த திட்டங்களையும் நிறைவேற்ற வில்லை என்பதை அம்மக்கள் உணர்ந்துள்ளனர்.

வேற்று நாடுகளான வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக ஊடுருவியவர்களுக்கு குடியுரிமை கொடுத்து தங்களின் வாக்கு வங்கிகளாக திரிணாமுல் காங்கிரஸ் மாற்றி வருகிறது. இவற்றில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்களே. இதனால் மாநிலத்தின் தனித்தன்மை மற்றும் மக்களின் உரிமைகள் பறிபோகிறது. ஹிந்து பண்டிகைகள் கொண்டாட தடை விதிப்பது, குற்றவாளிகள் முஸ்லிம்களாக இருந்தால் கண்டுகொள்ளாமல் இருப்பது, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஹிந்துக்களை வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் புறக்கணிப்பது, அந்த மண் சார்ந்த மரபுகளை அழிப்பது போன்றவற்றால் வங்கத்து கலாச்சாரம் மற்றும் தனி தன்மைகள் அழிந்து வருவதும் மக்களின் மனமாற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

மேலும் பாஜக வந்தால் சிறுபான்மையினரின் உரிமை பறிபோகும் என்ற வாதம் பொய்த்துப் போய்யுள்ளது. சிறுபான்மையினரின் போக்கும் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பி உள்ளது. “மோடி ஆட்சியில் முஸ்லீம்கள் நன்றாக தான் இருக்கிறார்கள் என பத்திரிகையாளர்களிடம் சில முஸ்லீம்கள் நேரடியாக தெரிவித்த காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வைரலானதை நாம் பார்த்திருப்போம்.

மாநில வளர்ச்சி, வங்கத்துக் கலாச்சார பாதுகாப்பு, உண்மையான சிறுபான்மை உரிமை, ஹிந்து விரோத போக்கு, அரசியல் படுகொலை, என அனைத்து கோணத்திலும் சரியான கட்சியாக பாஜக இருப்பதால் அதற்க்கு ஆதரவாக மக்கள் ஒன்று திரண்டிருப்பதே தற்போதைய மேற்கு வங்க களநிலவரம் .

நன்றி

R.விக்னேஷ் வாசுதேவ்


Share it if you like it