தோல்வியடைந்தாலும் பட்டியல் சமுதாய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பா.ஜ.க வேட்பாளர்..!

தோல்வியடைந்தாலும் பட்டியல் சமுதாய மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய பா.ஜ.க வேட்பாளர்..!

Share it if you like it

கடந்த கேரள சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது. பா.ஜ.க வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன் அவர்கள் பாலக்காடு நகராட்சியில் உள்ள மதுர வீரன் காலனியில் வசிக்கும் பட்டியல் சமூக மக்களிடம் நான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு அனைத்து குடும்பங்களுக்கும் மின் இணைப்புகள் கிடைக்கும் படியாக ஏற்பாடு செய்வேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

Image

மதுர வீரன் நகராட்சியின் 3 வது வார்டில் வசிக்கும். சில பட்டியல் சமுதாய மக்கள் எங்களுக்கு மின் இணைப்புகள் கிடைக்கவில்லை. அதற்குறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். மேலும் தங்களால் மின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்று சிலர் பா.ஜ.க வேட்பாளரிடம் வேண்டுகோள் விடுத்தனர். நான் வெற்றி பெற்ற பிறகு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று அவர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் பா.ஜ.க வேட்பாளர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஷாஃபி பரம்பிலிடம்  குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இருப்பினும் பா.ஜ.க வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன் அவ்வூர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை அண்மையில் நிறைவேற்றியுள்ளார்.

11 பட்டியல் சமூதாய குடும்பங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான ரூ 81,525 -க்கு ஒரு காசோலையை, பா.ஜ.க நிர்வாகிகள் மூலம் கேரள மின் வாரியத்திடம். பா.ஜ.க வேட்பாளர் மெட்ரோமேன் ஸ்ரீதரன் வழங்கி இருப்பது கேரள  மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it