வாராக் கடனை மீட்டெடுக்க மத்திய அரசு அதிரடி..!

வாராக் கடனை மீட்டெடுக்க மத்திய அரசு அதிரடி..!

Share it if you like it

பிற வங்கிகளின் வாராக் கடன் கணக்கு விவரங்களை பெற்று, அந்நிறுவன சொத்துக்களை கையகப்படுத்துதல், வங்கிகளை முடக்குதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும், நிதி நிறுவனமான வாராக் கடன் வங்கியை மத்திய அரசு புதிதாக துவங்கி உள்ளது.

முதல் கட்டமாக, 500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் வாராக் கடன் விவரங்களை, இந்த சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் நிர்வகிக்க உள்ளது. இந்த வகையில், 70 – 80 வாராக் கடன் கணக்குகள் அடையாளம் காணப்பட்டு. மொத்தத்தில், 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான வாராக் கடனை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்நிறுவனம் ஈடுபட உள்ளது.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கடன் வாங்கி சுகமாக வாழ்ந்தவர்கள் கூட இப்போது உள்நாட்டில் இருக்க பயந்து அண்ணிய நாட்டில் ஒளிந்து வாழ்கின்றனர். ஆனால், பாஜ., அரசு தனியாருக்கு சாதகமாக நடந்து கொள்கிறது. கார்ப்பரேட் கைகூலி என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் அவதூறு பரப்பி வந்த நிலையில் மத்திய அரசின் இந்த சீரிய நடவடிக்கையை பற்றி எந்த ஒரு அரசியல் தலைவர்களும் பாராட்டு கூட தெரிவிக்கவில்லை. மத்திய அரசின் இந்த அதிரடியான நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it