பாரத நாட்டின் வளர்ச்சி மோசமாக இருந்தது எல்லாத்துறைகளிலும் ஊழல் அடித்தட்டு மக்களுக்கு எந்த நலத்திட்ட உதவியும் செய்யாமல் அவர்களை வறுமையிலேயே வாழவைத்தது அப்போதைய அரசு அதுவரை பொறுமையாக இருந்த மக்கள் வெகுண்டு அந்த அரசை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி பீடத்தில் 2014ஆம் ஆண்டு அமர வைத்தனர். 15 ஆண்டுகள் குஜராத்தில் நல்லாட்சி தந்த திரு.மோடி அவர்களை பாரதத்தின் பிரதமராக பொறுப்பேற்க செய்தனர்.
திரு மோடி அவர்கள் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் பணக்கார பரம்பரை, அரசியல் பின்புலம் ஆகியவை இல்லாதவர். இதுவரை எந்த ஊழல் குற்றசாட்டிலும் சிக்காதவர் இத்தனை பெருமை கூறியவர் நமது பாரதத்தின் பிரதமராக இருப்பது நமது ஜனநாயகத்தின் பெருமை. திரு நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக பொறுப்பேற்ற நாளிலிருந்து மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். பாரத நாட்டின் மக்களை தன் குழந்தைகளாக பாவித்து மக்கள் மீது இவர் காட்டிய அன்பின் காரணமாக மக்கள் மீண்டும் 2019 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை வெற்றி பெற செய்து மீண்டும் திரு மோடியை பிரதமர் நாற்காலியில் அமரவைத்தனர். அவர் பாரத பிரதமராக பொறுப்பேற்று 2014 ஆம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை மொத்தம் ஏழு ஆண்டுகளின் பல சாதனைகளை செய்துள்ளார்.
பாரத பிரதமர் மோடிஜியின் மக்களுக்கு கொடுத்த சிறப்பான திட்டங்கள்;-
ஒரு நாட்டின் உயிர் நாடி விவசாயம் அந்த விவசாயத்திற்கும் விவசாயிக்கும் ரூபாய் 6000 வழங்கும் திட்டம் கழிவறை இல்லாத வீடுகளுக்கு கழிவறை கட்டிக்கொள்ள ரூபாய் 12000 வழங்கும் திட்டம்
மலிவு விலையில் மக்களுக்கு மருந்துகள் வழங்கும் திட்டம்
இளைஞர்களுக்கு தொழில் தொடங்க எளிதில் வங்கிகடன்
பெண்களுக்கு பெரிதும் பயனளிக்கும் இலவச கேஸ் கனெக்ஷன்
செல்வமகள் சேமிப்பு திட்டம்
ஏழை எளியோருக்கு இலவச வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம்
50 கோடிப் பேருக்கு ரூபாய் 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ காப்பீடு
அனைவருக்கும் இலவச வங்கி கணக்கு
மிகக் குறைந்த பிரீமியத்தில் இன்ஷூரன்ஸ்
மாநிலங்களில் அதிகப்படியான மருத்துவ கல்லூரிகள்
மருத்துவமனைகள் கட்டிக்கொள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி உதவி
புதிய புதிய பல்கலைக்கழகங்கள்
கேந்திர வித்யாலயா பள்ளிகள்
குரூப் பி பணிகளுக்கு ஆள் சேர்ப்பதில் நடைபெற்றுவந்த ஊழலை ஒழிக்க நேர்முகத் தேர்வை ரத்து செய்தது
முதலிய எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் நமது பிரதமர்.
சட்ட பிரிவு 370 நீக்குதல்
வரி சீர்திருத்தத்தின் பொருட்டு ஜிஎஸ்டி யைக் கொண்டு வருதல்
நீதிமன்ற தீர்ப்பின் படி மிகவும் அமைதியான முறையில் அயோத்தியில் ராமர் கோவில் மிகப்பிரம்மாண்டமான மசூதியும் கட்டப்பட தேவையானவற்றை செய்தல்
என வரலாற்றுப் பக்கங்களில் பார்க்கப்படவேண்டிய விஷயங்களையும் நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் செய்திருக்கிறார் கொடிய நோய் நம்மைப் பிடித்திருக்கும் இந்த நேரம் சவால்கள் சூழ்ந்த நேரம் இந்த காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதியான முக கவசம் தயாரிப்பது தடுப்பூசிகளை கோடிக்கணக்கில் தயாரிக்க வைத்தது உற்பத்தியை அதிகப்படுத்தியது அவை குணப்படுத்த மருந்து தயாரிக்க டி ஆர் டி ஓ ஊக்கப்படுத்தியது எல்லாவற்றிற்கும் மேலாக தனது மந்திர சொற்களால் நம் நாட்டின் கோடிக்கணக்கான மக்களை கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கட்டுப்பாடோடு இருக்க வைத்து இப்படி பல அற்புதங்களை செய்து வருகிறார்….