திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கொரோனா தடுப்பூசியை மாநிலங்களுக்கு வழங்குவதில், மத்திய பா.ஜ.க, அரசு அரசியல் பார்வையுடன் நடந்து கொள்கிறது என்ற கருத்து, நாடு முழுதும் நிலவுவதாகவும். அரசியல் பார்வையை தவிர்த்து, மனித நேய பார்வை தான் அவசியம் என்றும் திடீர் என்று மத்திய அரசிற்கு அறிவுரை வழங்கி உள்ளார்.
ஆனால் மத்திய அரசு தடுப்பூசி விவகாரத்தில் அனைத்து மாநிலங்களை சரியான கண்ணோட்டத்தில் பார்த்து தேவைக்கு ஏற்றபடி தடுப்பூசி விநியோகம் செய்து வருகிறது ஆனால் மாற்றுக் கட்சியினர் தான் வேண்டுமென்றே அரசியல் செய்து வருகின்றனர். எடுத்துக்காட்டாக நாட்டில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி வீணடிக்கப்பட்டுள்ளது
ராஜஸ்தானில் 11.5 லட்சம் தடுப்பூசியும், சட்டீஸ்கரில் மத்திய அரசு அனுப்பியதில் சுமார் 30% தடுப்பூசியும், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் சுமார் 37 % தடுபூசியும் வீணடிக்கப்பட்டுள்ளது. ஏன் தமிழகத்தில் கூட அனுப்பிய தடுப்பூசிகள் பல இடங்களில் தேங்கி கிடந்த கதைகளும் நாம் அறிந்ததே.
ஆனால் விவரம் அறிந்தும் இக்கட்டான இந்த சூழ்நிலையில் கூட மக்களை மத்திய அரசிற்கு எதிராக திருப்ப வேண்டும் என்ற மிக கீழ்த்தரமான நோக்கோடு வீரமணி அறிக்கை விட்டு உள்ளார் எனவும். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல். திணறி வரும் ஸ்டிக்கர் அரசிற்கு அறிவுரை வழங்காமல். மத்திய அரசை விமர்சனம் செய்து கடும் கண்டனத்திற்குறியது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.