மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை, வீணடித்த மாநிலங்களில் 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது, என்பது அனைவரும் அறிந்ததே. மத்திய அரசு மீது தமிழக மக்களுக்கு வெறுப்புணர்வு, ஏற்படும் வண்ணம். தி.மு.கவும் அதன் கைகூலி ஊடகங்களும் இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
இந்நிலையில் தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தந்தி டி.வி ஏற்பாடு செய்த ஊடக விவாதத்தில் கலந்து கொண்டார். கோவை மக்களுக்கு ஏன்? தடுப்பூசி முறையாக வழங்கவில்லை என்று பா.ஜ.க மூத்த தலைவர் ராகவன் கேள்வி எழுப்பி இருந்தார்.
கொரோனா தடுப்பூசி ஊசி வேண்டும் என்றால் பிரதமர் மோடியிடம் கேட்க சொல்லுங்க என்று பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மிகவும் அலட்சியமாக மக்கள் உயிர் பற்றி துளியும் கவலைப்படாமல். பேசியிருப்பது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.