மத்திய அரசிடம் மண்டியிட்ட டுவிட்டர் நிறுவனம்..!

மத்திய அரசிடம் மண்டியிட்ட டுவிட்டர் நிறுவனம்..!

Share it if you like it

இந்திய அரசின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும், எதிராக டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், போன்றவை செயல்படுவதாக மத்திய அரசு கருத்து தெரிவித்து இருந்தது. மேலும் இந்திய அரசின் சட்ட, திட்டங்களுக்கு, மேற்கூறிய நிறுவனங்கள் நிச்சயம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் எனவும். அதற்காக மூன்று மாத கால அவகாசத்தையும் மத்திய அரசு வழங்கி இருந்தது.

Image

இந்திய அரசின் சட்ட, திட்டங்களை, எதிர்த்து டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியது. இதனை தொடர்ந்து ஆச்சார்யா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ரேகா பிள்ளை. புதிய டிஜிட்டல் கொள்கைகளை டுவிட்டர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

Image

இதனை அடுத்து டுவிட்டர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் புதிய கொள்கைகளை ஏற்று கொள்கிறோம். மேலும் குறை தீர்க்கும் அதிகாரி ஒருவரை உடனே நியமிக்கிறோம் என்று நீதிமன்றத்தில் டுவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it