வேலூர் இப்ராஹிம், பா.ஜ.க தேசிய சிறுபான்மைப்பிரிவு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்..
தமிழ்நாடு ஏகத்துவ ஜமா அத் என்ற அமைப்பை துவக்கி, ஹிந்து, இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமை ஏற்படவும். பிரிவினையை தூண்டும் தி.க, தி.மு.க, இஸ்லாமிய அடிப்படைவாதிகளின், முகத்திரையை கிழிக்கும் விதமாக தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக 20 சட்டமன்ற தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரமும் செய்தார்.
இந்நிலையில் பா.ஜ.க தேசிய சிறுபான்மை பிரிவுக்கு, 6 துணை தலைவர்கள், 3 பொது செயலர்கள், 7 செயலர்கள் மற்றும் பொருளாளர் அறிவிக்கப்பட்டனர். தமிழகத்தை சேர்ந்த வேலூர் இப்ராஹிம், பா.ஜ.க தேசிய சிறுபான்மைப்பிரிவு செயலராக பா.ஜ.க தலைமை நியமனம் செய்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து பா.ஜ.க துணைத் தலைவர் உட்பட அண்ணாமலை, பல முக்கிய தலைவர்கள் இப்ராஹிமிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
I am Appointed as Secretary of National BJP Minority Team.
I am heartlely thankful to
PM Narendra Modi ji,
National President BJB J.P.Nadda ji, BJP Tamil Nadu President Dr.L.Murugan ji, President Minority Jamal Siddiqui ji,
all National & State Leadership, Friends & Followers pic.twitter.com/cCR8Efe4DB— SYED IBRAHIM ( vellore ibrahim ) (@syedibrahimbabl) May 31, 2021