ஒரு கட்சியின் மீதான வெறுப்பை இந்தியத் தேசத்தின் மீது காட்டுவதா – ஷியாம் கிருஷ்ணசாமி பாய்ச்சல்..!

ஒரு கட்சியின் மீதான வெறுப்பை இந்தியத் தேசத்தின் மீது காட்டுவதா – ஷியாம் கிருஷ்ணசாமி பாய்ச்சல்..!

Share it if you like it

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க முடியாத படுதோல்வியடைந்த ஸ்டிக்கர் அரசு. தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் இறங்கி இருப்பது வெட்க கேடான செயல் என்பது. அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வண்ணம் ஒன்றிய அரசு என்று தி.மு.க தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.

இந்நிலையில் புதிய தமிழக கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் தி.மு.க-விற்கு தக்க பதிலடியை இவ்வாறு வழங்கியுள்ளார்.

  • ஒரு கட்சியின் மீதான இன-அரசியல் ரீதியான வெறுப்பை உமிழ்வதற்காக இந்தியத் தேசத்தையே ’ஒன்றியம்’ என்று உள்நோக்கத்தோடு குறிப்பிடுவது நீங்கள் பதவியேற்றுக் கொண்ட போது எடுத்துக் கொண்ட பிரமாணத்திற்கு எதிரானதும், சட்டவிரோதமானதும் ஆகாதா?
  • இந்திய தேசம் ஒரு ’ஒன்றியமெனில்’ தமிழ்நாடு ஒரு ‘ஊராட்சியா’? ஆட்சியில் இருப்பவர்கள் மீதான விருப்பு, வெறுப்புகளை, பிறந்த தேசத்தின் மீது காட்டக்கூடாது. பாரத தேசத்தை எத்தனையோ பேர் ஆண்டு இருக்கிறார்கள். மோடிக்கு முன்பும் இந்தியத் தேசம் இருந்தது; பின்பும் இருக்கும்.


Share it if you like it