மோடி அரசின் 7 ஆண்டு சாதனை ( பகுதி – 5 ) – டிஜிட்டல் இந்தியா

மோடி அரசின் 7 ஆண்டு சாதனை ( பகுதி – 5 ) – டிஜிட்டல் இந்தியா

Share it if you like it

இன்று உலகம் நவீன மயமாகிக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் அந்த நவீனத்தை அடிப்படையாக கொண்டு இந்தியாவின் வளர்ச்சியை முன்னேற்ற நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2015 ஆம் ஆண்டு ஜுலை 1-ஆம் தேதி டிஜிட்டல் இந்தியா என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்.

இந்த திட்டத்தின் மூலம் அரசாங்கத்தின் மொத்த கணக்குகளும் தனிநபர் நடத்தும் தொழிற்சாலைகளின் கணக்குகளும் அனைத்தும் இணைய வழியின் மூலம் அறிந்து கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தின் செயல்பாடுகள்

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நாட்டின் கட்டமைப்பு மேம்படுத்தவும் அரசின் திட்டங்களை மக்களுக்கு நவீன முறையில் எடுத்து செல்லவும் தொழில் நுட்பத்தை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தால் எலக்ட்ரானிக்ஸ் சேவைகள், பொருட்கள் உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்புகள் ஆகிய மூன்று துறைகள் இத்திட்டத்தால் பயன்பெறுகின்றன.

டிஜிட்டல் இந்தியா திட்டம் மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது.

  1. டிஜிட்டல் கட்டமைப்பு ஒவ்வொரு இந்திய குடிமகனையும் சென்றடைதல்.
  2. மக்களின் கோரிக்கைகளின் அடிப்படை நிர்வாகம், திட்டங்கள் மற்றும் சேவைகள் ஆகியவை செயல்படுத்துதல்.
  3. மக்களை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த ஊக்குவித்தல், அதிவேக இணைய இணைப்பு, மொபைலில் இணையத்தை ஒன்றாக்குவது, இ-கவர்னென்ஸ் அதாவது டிஜிட்டல் முறையில் அரசு திட்டங்களை செயல்படுவது, அரசின் தகவல்கள் அனைத்தும் நேரடியாக மக்களை சென்றடைதல் ஆகியவை இத்திட்டத்தின் மூலம் எளிதில் சாத்தியமாகும்.

இத்திட்டத்தில் முக்கிய அம்சம்

  1. டிஜிட்டல் லாக்கர் முறையில் மூலம் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் கையாளுதல்,
  1. ஆவணங்களை பாதுகாப்பது எளிதாகிறது.
  2. அனைத்து வேலைகளுக்கும் ஆவணங்களை ஆன்லைன் மூலம் பயன்படுத்தலாம்.
  3. அரசு நிர்வாகம், தூய்மை இந்தியா திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு கைபேசி

மூலம் விண்ணப்பம் தரப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தினைப் பயன்படுத்தி    திட்டங்களின் நிலையை தெரிந்துகொள்ளலாம்.

  1. ஆதார் கார்ட்டை அடிப்படையாக கொண்டு இ-சைன் (எலக்ட்ரானிக் கையெழுத்து) உருவாக்கப்படுகிறது. அந்த கையெழுத்தை ஆன்லைன் மூலம் அரசின் திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.
  1. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் புதிதாக இ-ஹாஸ்பிடல் (மருத்துவமனை) விண்ணப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து மருத்துவர் அப்பாயின்மென்ட், கட்டணம், மருத்துவ அறிக்கை, ரத்த வங்கி இருப்பு ஆகியவற்றை தெரிந்துக்கொள்ளலாம்.
  1. மத்திய அரசு வழங்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகையை ஆன்லைனில் விண்ணப்பித்து பெறலாம்.
  1. கிராம பஞ்சாயத்துகளுக்கு ‘பாரத் நெட்’ என்ற பெயரில் அதிவேக இணையம் கிடைக்க வழிவகை செய்தது.
  1. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மற்றும் அதிகம் கூடும் இடங்களில் இலவச  வை-பை (Wifi) வசதி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் எலக்டரானிக்ஸ் துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல வேலை வாய்ப்புகள் உருவாகும். டிஜிட்டல் முறையில் இந்தியாவை வலுப்படுத்த இந்த திட்டம் பெரிதும் உதவும். சுகாதாரம், கல்வி, வேளாண்மை, வங்கித்துறை ஆகியவற்றின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

10. இத்திட்டத்தினால் வெளிநாடு நம்முடைய பாரத நாட்டை வியந்து பார்க்கும் அளவிற்கு இந்த திட்டம் சிறப்பாக செயல்படுகிறது. இதனால் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பெரிதும் பயன் அளிக்கிறது. இவ்வாறாக பாரத நாட்டின் வளர்ச்சிக்கு இரவு பகல் பாராது அயராது உழைத்துக்கொண்டிருப்பவர் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆவார்.

 

 


Share it if you like it