தமிழக அரசு வருவாயை பெருக்க, மீண்டும் லாட்டரி சீட்டு விற்பனையை கொண்டு வர வேண்டும். விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று அண்மையில் சிவகங்கை காங்., எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியிருந்தார்.
மதுப்பழக்கத்தால் பல குடும்பங்கள் தமிழகத்தில் படுகுழியில் இருக்கும் சமயத்தில். லாட்டரி சீட்டு விற்பனை குறித்து எம்.பி பேசலாமா? என்று காங்கிரஸ் எம்.பிக்கு நெட்டிசன்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நிருபர் ஒருவர் லாட்டரி சீட்டு குறித்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பிய பொழுது இவ்வாறு கூறியுள்ளார்.
லாட்டரிச் சீட்டு விற்பனையை அனுமதிப்பதா? வேண்டாமா ? என்பது தமிழ்நாடு மாநில அரசின் கொள்கை முடிவு. லாட்டரிச் சீட்டு, குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு வரி விதிப்புக் குறித்துச் சரக்கு சேவை வரி கவுன்சில் ஒரு குழுவை அமைத்துள்ளதாகத் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.