எத்தனையோ நடுத்தர மக்களின் கனவு என்பது “ஒரு சொந்த வீடு வாங்கணும் சார்” என்பதாகத்தான் இருக்கிறது. அவர்களின் கனவில் மண்ணள்ளி போடும் விதமாக புதிய ஆட்சி பதவி ஏற்று ஒரு மாதத்திலேயே கட்டுமான பொருட்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. மத்திய அரசு செயலால் ஒரு ஈயோ, கொசுவோ இறந்தால் கூட உடனே பிரேக்கிங் நியூஸ் போடுவதும், இவர்களின் சித்தாந்தத்திற்கு ஏற்றபடி ஒரு 4 பேரை வரவழைத்து ஊடக விவாதம் வைப்பது என மாநிலத்தையே அல்லோல கல்லோல படுத்தும் ஊடகங்கள். இந்த விலை ஏற்றம் குறித்து ஏன் இதுவரை ஒரு ஊடக விவாதம் கூட வைக்கவில்லை என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் என்னங்களை பிரதிபலிக்கும் விதமாக பாஜக மூத்ததலைவர் எச்.ராஜா
“மே 2 அன்று சிமெண்ட் 1 மூட்டை 380. இன்று 520 திமுக என்றாலே சிமெண்ட் கார்ட்டல் கூட்டுக் கொள்ளை என்பது நிருபணம்.30 நாட்களில் மூட்டைக்கு 140 ரூபாய் விலையேற்றம். ஆனால் இதுதான் விடியலா என்று ஊடகங்கள் ஏன் விவாதிக்கவில்லை. மக்களை கொள்ளையடிக்கும் ஆட்சிக்கு துதிபாடுவதுதான் ஊடக தர்மமா?”
என தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மே 2 அன்று சிமெண்ட் 1 மூட்டை 380. இன்று 520 திமுக என்றாலே சிமெண்ட் கார்ட்டல் கூட்டுக் கொள்ளை என்பது நிருபணம்.30 நாட்களில் மூட்டைக்கு 140 ரூபாய் விலையேற்றம். ஆனால் இதுதான் விடியலா என்று ஊடகங்கள் ஏன் விவாதிக்கவில்லை. மக்களை கொள்ளையடிக்கும் ஆட்சிக்கு துதிபாடுவதுதான் ஊடக தர்மமா?
— H Raja (@HRajaBJP) June 11, 2021