அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக ஸ்டாலின் இருக்கிறார், அவர் 1971 இவர் 2021 சரக்கடிப்போர் சங்க தலைவர் நெகிழ்ச்சி உரை…! 

அப்பாவுக்கு தப்பாத பிள்ளையாக ஸ்டாலின் இருக்கிறார், அவர் 1971 இவர் 2021 சரக்கடிப்போர் சங்க தலைவர் நெகிழ்ச்சி உரை…! 

Share it if you like it

மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவராக இருப்பவர் செல்லபாண்டியன். தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் மதுக்கடைகளை உடனே மூடுவோம் என்று தி.மு.க தனது வாக்குறுதியை மக்களுக்கு வழங்கியது.

மதுவிலக்கு சட்டம் கொண்டு வருவோம் என்று கூறிய தி.மு.கவிற்கு, சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், பல ஏழை குடும்பங்கள், ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு பாராட்டியவர்களின் கனவில் மண் அள்ளி போட்டும் விதமாக மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் சரக்கடிப்போர் சங்க தலைவர் செல்லப்பாண்டியன் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது அதில் அவர் கூறியதாவது.

முதலில் நாங்கள் அச்சப்பட்டோம். ஸ்டாலின் மதுவிலக்கு சட்டம் கொண்டு வந்து விடுவாரோ என்று, எப்பொழுது அவர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்று அவர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டாரோ, அப்பொழுதே இவர் மதுக்கடைகளை மூட மாட்டார் என்பதை தீர்மானித்து விட்டோம் என்று அவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it