சபரிமலை ஆலயம் அருகில் வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைக் கொல்ல சதியா..
உலக புகழ் பெற்ற சபரிமலை ஆலயம் கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள கொன்னியில் இருந்து சுமார் 90 ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பத்தனம் திட்டா பகுதியில் இதற்கு முன்பு பயங்கரவாதிகள் நடத்திய ஆயுத முகாம் பற்றிய தகவல்கள் வெளி வந்தது.
இந்தியாவின் புலனாய்வு அமைப்புகளின் கருத்து படி, இப்பகுதி இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத அமைப்புகளின் மிக முக்கிய பகுதியாக பார்க்கப்படுகிறது. இதன் அருகில் தான் சபரிமலை ஐயப்பன் ஆலயம் உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பா.ஜ.க மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் அண்மையில் நடந்து முடிந்த கேரள சட்டமன்றத் தேர்தலில் கொன்னி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். கேரளாவில் ஆர்.எஸ்.எஸ்- பாஜக மூத்த தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில். 90 ஜெலட்டின் குச்சிகள் கிடைத்து இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத அமைப்புகள், பயங்கரவாத முகாம்களை நடத்துவதாக தகவல்கள் வருகிறது. ஆனால் வாக்கு அரசியலை கருத்தில் கொண்டுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், இது குறித்து பேசுவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி
More explosives found in Kerala from Pathanamthitta district; a larger terrorist plot to target Sabarimala, kill BJP-RSS leaders? https://t.co/PIFfXKFn1e
— Organiser Weekly (@eOrganiser) June 16, 2021