பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பிரபல வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் அவர்கள் அலுவலகத்தில் ஏற்பட்ட மர்ம தீ விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.கவின் பல மூத்த முன்னோடிகள், அவரின் ஆதரவாளர்கள், மற்றும் நெட்டிசன்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் அஸ்வத்தாமன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜன்னல் அருகில் கிடந்த மர்ம பொருள் தான் காரணம் . மின் கசிவு காரணம் இல்லை . “காவல்துறை புலன்விசாரணை செய்யவேண்டும்” என தீயணையப்பு துறை வலியுறுத்தல் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜன்னல் அருகில் கிடந்த மர்ம பொருள் தான் காரணம் . மின் கசிவு காரணம் இல்லை .
"காவல்துறை புலன்விசாரணை செய்யவேண்டும்" என தீயணையப்பு துறை வலியுறுத்தல் … pic.twitter.com/q1zFhOa5So
— A.Ashvathaman (@asuvathaman) June 17, 2021
ஒன்றரை மாதம் கழித்து இன்றுதான் என் அலுவலகத்திற்கு சென்றேன் .
ஆபிஸ் முழுவதும் எரிந்து உள்ளது. கரெண்ட் இருக்கிறது . short circuit ஆகவில்லை.
ஜன்னல் பக்கத்திலிருந்து தான் எரியத்தொடங்கியிருக்கிறது . வெளியிலிருந்து ஏதும் போடப்பட்டு எரிந்துள்ளதாகாவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளேன் pic.twitter.com/W8FXu4MYUF
— A.Ashvathaman (@asuvathaman) June 14, 2021
இந்த மாதிரி ஒரு பொருள் என்னுடைய அலுவலகத்தில் இல்லவே இல்லை . அங்கிருந்து தான் தீ ஆரம்பித்து பற்றி எரிந்ததற்கான தடயங்கள் உள்ளது.
ஜன்னல் வழியாக சமூக விரோதிகள் போட்டிருக்க கூடும்.
புகை சாம்பலும் வித்தியாசமாக உள்ளது. ஏதேனும் ரசாயனம் போடப்பட்டு இருந்தால்தான் இதுமாதி்ரியான புகைவரும் pic.twitter.com/txUMaGrJVr— A.Ashvathaman (@asuvathaman) June 14, 2021