தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த போது அதில் ஒருவர், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சார்ந்தவர்கள் கோவிட் 19 நோயாளிகளுக்கான பராமரிப்பு மையம் நடத்தி வருவதை குறித்து உங்கள் கருத்து என்னவென்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு அமைச்சர் கூறிய பதில் “முதலமைச்சர் கோவிட் 19 நிவாரண பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார் அது இப்பொழுது நடந்துள்ளது” என்றார்.
கடந்த அதிமுக ஆட்சியின்போது கூட இந்த சீன வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், பொருளாதார சிக்கலில் சிக்கிய பொதுமக்களுக்கும் பல்வேறுவிதமான உதவிகளை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் செய்து வந்தனர் என்பது உலகறிந்த உண்மை.
1925 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ராஷ்ட்ரீய ஸ்யம்சேவக சங்கம் எனும் இந்த இயக்கம், 1930களின் இறுதியில் தமிழகத்தில் தனது பயிற்சிகளையும், சேவை பணிகளையும் துவங்கியது.
அன்று முதல் இன்று வரை பல இக்கட்டான நேரங்களிலும், தமிழகம் சந்தித்த இயற்கை பேரிடர் காலங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர், அவர்களின் உயிரை கூட துச்சம் என நினைத்து மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று தமிழக மக்களின் நம்பிக்கையையும், அன்பையும் பெற்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரு ஆலமரமாக மாறி சேவை எனும் நிழலை தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.
எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது ஆளும் கட்சியை குறை சொல்வதும், ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது மத்திய அரசை குறை சொல்வதும் பழக்கமாக கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் கூட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை மக்கள் இயக்கம் என்று அங்கீகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
யாராயினும் அது தர்மத்திற்கு எதிராக செயல்படக் கூடியவராயினும், தர்மத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் என்று இந்த நிகழ்வு நம்மை உணர்த்துகிறது
https://twitter.com/itisatp/status/1406127367899123721