தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டங்களின் ஒன்றியத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பு ஆலோசனை குழு ஒன்றினை நியமனம் செய்து உள்ளார். அந்த குழுவில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அமெரிக்க பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸை சேர்ந்த ஜீன் ட்ரெஸ், முன்னாள் நிதித்துறை செயலாளர் எஸ். நாராயண் ஆகியோர் இடம் பெற்று உள்ளனர். ஆனால் தற்பொழுது இம்முடிவு பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
தமிழகத்திற்கான இக்குழுவில் தமிழகத்தை சேர்ந்த பொருளாதார நிபுணர்களோ, வல்லுனர்களோ, வியாபாரிகளோ, தொழிலதிபர்களோ, இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்த, பட்டியல் சமுதாய பிரதிநிதிகள், எவரும் இடம் பெறாமல் சமூகநீதிக்கு எதிராக, இக்குழுவின் அமைப்பு இருப்பதாக பலரும் மு.க.ஸ்டாலின் அவர்களை விளாசி வருகின்றனர்.
வழக்கமாக திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல்பாடுகளுக்கு, சமூக வலைத்தளங்களிலும், டிவி விவாதங்களிலும், முட்டு கொடுக்கும், முன்கள போராளிகள் இது குறித்து என்ன சொல்வது என்று தெரியாமல் குடோன் ஒன்றினை வாடைக்கு எடுத்து பதுங்கி உள்ளதாக ஒரு தகவலும் தற்பொழுது வந்துள்ளது.