சேலம் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் விவசாயி ஆவார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகேசன், கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை பகுதியில் மதுக்கடைகள் திறந்திருப்பதை அறிந்து தனது நண்பர்களுடன் சென்று மது அருந்தி விட்டு கருமந்துறை வழியாக ஊர் திரும்பி உள்ளார்.
இருசக்கர வாகனத்தில் முருகேசன் உட்பட 3 பேர் வந்து கொண்டிருந்ததால் சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறையினர் அவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து நடந்து செல்லுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது.
நாங்கள் எப்படி அவ்வளவு தூரம் நடந்து செல்வது என்று வாக்குவாதம் செய்து உள்ளனர். அங்கு பணியில் இருந்த ஏத்தாபூர் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் முருகேசனை லத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். உடன் வந்த நண்பர்கள் எவ்வளவோ கெஞ்சியும், காவலர் தனது தாக்குதலை நிறுத்தாத காரணத்தினால் மயக்கம் அடைந்த முருகேசனை, அவரின் நண்பர்கள் மருத்துவமனை அழைத்து செல்லும் பொழுது மரணம் அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதானா அது ஐயோ பாவம் மறைந்தவர் உழைப்பை வைத்துதான் இவர் குடும்பம் வாழ்ந்து இருக்கும் இனி இந்த விவசாயி குடும்பத்திற்கு இனி கடைசி வரை யார் உதவி செய்வார்கள்.😣😨#JusticeForMurugesan pic.twitter.com/Jv2TZHDCim
— ANNAPOORANI (@annapoorani_2) June 23, 2021