Share it if you like it
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வீர ராகவபுரம் பகுதியில் பாலாற்றில் தொடர்ந்து கள்ளத்தனமாக மணல் கொள்ளையடிக்கப்படுகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுபிச்சக்கரவர்த்தி என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் வீர ராகவபுரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பாலாற்று கரையோரம் மினி வேனில் மணல் மூட்டைகளை கடத்தி சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.பின்னர் விசாரணையில் திமுக பிரமுகர் முத்து என்பவருடைய மகன் விமல் என்பது தெரியவந்தது.இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் மினி வேனையும் 80 மணல் மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
Share it if you like it