கொரோனா தொற்று எதிரொலி காரணமாக கடும் கட்டுப்பாடுகளை பா.ஜ.க ஆளும் மாநிலமான உ.பி அரசு மேற்கொண்டு வருகிறது. மக்கள் சார்ந்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் யோகி மேற்கொண்டார். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிலைமையை நன்கு உணர்ந்து., உ.பி அரசு மிக சிறப்பாக கையாண்டதற்காக யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை உச்ச நீதிமன்றம் அண்மையில் பாராட்டியுள்ளது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மாநிலத்திற்கு வரும் போது அவர்கள் குறித்து பதிவு செய்வதற்காக www.rahat.up.nic.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அனைத்து விவரங்களும் உடனுக்கு உடன் பதிவேற்றம் செய்யப்பட்டது.
இத்தரவுகளின் படி, மொத்த கோவிட் -19 காலகட்டத்தில் 37,84,255 தொழிலாளர்கள் உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு திரும்பியுள்ளனர். பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் அனைத்து திறன்களும் மிக தெளிவாக வரையறுக்கப்பட்டு. பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் வாழ்வாதாரமே தனது முன்னுரிமை என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பலமுறை கூறி வந்த நிலையில். உச்ச நீதிமன்றம் யோகி அரசின் திறமையை பாராட்டியுள்ளது.
எதற்கெடுத்தாலும் யோகி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் சில்லறை போராளி சித்தார்த் மற்றும் பொய்யான செய்திகளை வெளியிடும் குணம் ஆகாத குணசேகரன் போன்றவர்கள் யோகி அரசை உச்சநீதிமன்றம் பாராட்டியது குறித்து வாய் திறப்பார்களா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.