மானம்பாடி எனும் சிற்றூர், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதன் அருகே சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ராஜேந்திர சோழன் காலத்திய கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோவிலின் பெயர் நாகநாதசாமி கோவில் என அழைக்கப்படுகிறது. சாலை விரிவாக்கம் என்ற பெயரில் இக்கோவில் மதில் சுவர் இடித்து தள்ளப்பட்டது. பின்னர் சில நல்லுள்ளங்களின் முயற்சியில் இது மீண்டும் கட்டப்பட்டது. எந்த பராமரிப்பும் இல்லாமல் சிதிலமடைந்து இருக்கும் இக்கோவிலை முழுவதும் அப்புறப்படுத்தும் விதமாக மீண்டும் சாலை விரிவாக்க பணிகள் துவங்கி உள்ளது.
நாட்டின் வரலாற்று பொக்கிஷம் என்ற அக்கறை கூட இல்லாமல். அறநிலையத்துறை மிகவும் அலட்சியமாக இருப்பதாகவும். பழமை மாறாமல் அக்கோயிலை புனரமைத்து தரவேண்டும் எனவும் ஹிந்துக்கள்கோரிக்கை வைத்து வருகின்றனர்.
எதற்கெடுத்தாலும் தமிழ் தமிழ் என்று போலியாக பேசிவருபவர்கள் என்ன ஆனார்கள் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.