அதிரடி காட்டிய பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் குழப்பத்தில் தவிக்கும் சிக்ஸர் முதல்வர்..!

அதிரடி காட்டிய பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் குழப்பத்தில் தவிக்கும் சிக்ஸர் முதல்வர்..!

Share it if you like it

  • நீட் தேர்வை ரத்து செய்ய முடியாமல் தமிழக மக்களின் கவனத்தை மத்திய அரசுக்கு எதிராக திருப்பியது.
  • கொரோனா தடுப்பூசியை முறையாக வழங்கவில்லை என்று மக்களின் கோவத்தை மோடி அரசுக்கு எதிராக திருப்பியது.
  • மத்திய அரசை இனிமேல் ஒன்றிய அரசு என்று தான் அழைப்போம் என  மக்களின் எண்ணத்தை மத்திய அரசின் பக்கம் மடை மாற்றியது.

பெட்ரோல், டீசல், விலையை குறைப்போம் என்று கூறி விட்டு ஆட்சிக்கு வந்த விடியல் அரசு. தற்பொழுதைய விலை ஏற்றத்திற்கு மத்திய அரசு தான் காரணம், என்று மக்களின் கவனத்தை பாரதப் பிரதமர் மோடியின் பக்கம் திருப்பி விட முயற்சி மேற்கொண்டது.

மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்ட, பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பெட்ரோல், டீசல், விலையை குறைக்க தற்பொழுது, முன்வந்துள்ளது. விலையை குறைப்போம் என்று கூறிய விடியல் அரசு, மக்களின் கவனத்தை எப்படி? திசை திருப்புவது என்று கடும் குழப்பத்தில் உள்ளதாக நெட்டிசன்கள் பலர் கிண்டல் செய்து வருகின்றனர்.


Share it if you like it