ஒதுங்க இடம் இல்லாமல் அலையும் ஜோடிகளே, வேலைக்கும், கல்லூரிக்கும் கட் அடிக்கும் காளையர்களே, குடித்துவிட்டு குப்புற விழ இடமில்லாமல் திரியும் குடிமகன்களே உங்கள் நலனில் அக்கறை கொண்ட திமுக ஆட்சியில் ஒரு அற்புத திட்டம்
ஆம்..! 2500 கோடியில் 4 பூங்காக்களை அமைக்கபோவதாக அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு. இன்றைய நிலையில் பூங்காக்களின் பயன்பாடு மேற்குறிப்பிட்டவையே தவிர அதனால் பெரிய வருமானமோ, பயன்பாடோ இல்லை… இவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக தேர்தல் அறிக்கை என்ற பெயரில் சொன்ன பொய்களில் மிக முக்கியமான பொய் குடும்ப தலைவிகளுக்கு மதம் 1000 வழங்கப்படும் என்பது. இது வரை அதுகுறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை.
கொரோனாவில் இறந்தவர்ளுக்கு 1 கோடி கொடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கோடி என்ன ஒரு ருபாய் நிவாரணம் கூட வழங்கவில்லை. ஆனால் இப்பொழுது 2500 கோடியில் பூங்கா மிகவும் அவசியமா..? கருணாநிதி பாணியில் பதில் சொல்ல வேண்டும் என்றால்.. கும்பி எரியுது, குடல் கருகுது, பூங்கா உனக்கு ஒரு கேடா?
உத்திரப் பிரதேசத்தில் வெறும் 12 மருத்துவக் கல்லூரிகளாக இருந்த எணிக்கையை ஆட்சிக்கு வந்த நான்கே ஆண்டுகளில் அதை 48 ஆக உயர்த்தியது யோகி தலைமையிலான பாஜக அரசு. நிதி நிர்வாகம் மற்றும் சிறந்த ஆட்சி என்றால் இது தான். 2500 கோடியில் பார்க் உருவாக்குவது இல்லை..!
பார்க்குகளில் பிரபலமான பார்க் “ஜுராசிக் பார்க்” படம் எடுக்கவே 400 கோடி தான் செலவு. ஆனால் வெறும் 4 பூங்கா கட்ட 2500 கோடி என்றால்… கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத பசியின் கோர முகத்தை திமுக காட்ட துவங்கிவிட்டது. ஊழலுக்கான பிள்ளையார் சுழியாகவே நாம் இதனை பார்க்க முடியும்.
இவர்களை ஒருபக்கம் வைத்து… ஊடகங்களில் வெளியான பழைய செய்திகளை கொஞ்சம் பார்ப்போம்.
உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியா, ரூ.13,000 கோடியில் பிரதமருக்கு புதிய வீடா..? மோடி யின் பயண செலவு 275 கோடி..! இப்படி பல நல்ல விசயங்களை தவறாக திரித்து செய்தி வெளியிட்ட எந்த ஊடகமும் இப்பொழுது வாய் திறக்கவில்லை..?
இவர்கள் முன்கள பணியாளர்களா..? இல்லை மு.க ஸ்டாலின் பணியாளர்களா..?
கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். மருத்துவமனை கட்டுங்கள்” என கூவிய புதிய போராளி ஜோதிகா, அவரது கணவர் சூரியா, சித்தார்த் இப்படி யாரையும் இப்பொழுது காணவில்லை..!
எனவே இது போன்ற நிர்வாக சீர்கேடுகளையும், அதை மறைக்கும் ஊடகங்களையும், உங்களை திசை திருப்பும் போலி போராளிகளையும் மக்களான நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
விக்னேஷ் வாசுதேவ்.R