மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் தமிழக முதல்வர் மிச்சப்படுத்தும் மத்திய அமைச்சர்…!

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் தமிழக முதல்வர் மிச்சப்படுத்தும் மத்திய அமைச்சர்…!

Share it if you like it

பொழுது போக்கிற்காக சைக்கிளில் செல்லும் தமிழக முதல்வரை பற்றி தெரிந்து இருப்பீர்கள், ஆனால் நாடாளுமன்றத்திற்கே சைக்கிளில் செல்லும் மத்திய அமைச்சர் பற்றி உங்களுக்கு  தெரியுமா?

பா.ஜ.க இளம் தலைவர் S.G சூர்யா டுவிட்டர் பதிவின் படி, தமிழக முதல்வர் ஒருமுறை சைக்கிள் பயணம் செல்வதற்கு காவல்துறையில் இருந்து

1 கூடுதல் ஆணையர்
1 இணை ஆணையர்
2 துணை ஆணையர்கள்
6 உதவி ஆணையர்கள்
18 ஆய்வாளர்கள்
51 துணை ஆய்வாளர்கள்
200 சிறப்பு ஆயுதப்படைகள்
10 மீட்டருக்கு ஈ.சி.ஆர் சாலையில் 1 போலீஸ்காரர் என பெரும் போலீஸ் பட்டாளத்தின் நேரத்தை பயன்படுத்தி கொள்கிறார்.

ஆனால் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், சாதாரண ஒரு குடிமகன் போல் இரண்டு முக்கிய துறைகளை (சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை  இரசாயனங்கள் மற்றும் உரங்கள்) கையாளும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தினசரி பாராளுமன்றத்திற்கு சைக்கிளில் செல்லும் வழக்கம் உடையவர். அதற்கு அவர் சொல்லும் காரணம், மக்களின் வரி பணத்தை மிச்சப்படுத்தவும், மக்களோடு, மக்களாக, பழகுவதற்கு இவ்வாறு செய்வதாக கூறியுள்ளார்.

ஆனால் வேடிக்கை என்னவென்றால் மக்களின் வரிப்பணத்தை வீணடித்து சைக்கிள் பயணம் செய்யும் முதல்வருக்கு தமிழக ஊடகம் கொடுக்கும் விளம்பரம், மக்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் மத்திய அமைச்சரை பற்றி இதுவரை ஒரு செய்தி தொகுப்பாவது வெளியிட்டு இருப்பார்களா?  நல்லதை விரும்பும், நல்லவர்களாகிய நாமாவது இந்த செய்தியை அதிக பேரிடம் பகிர்ந்து கொள்வோம்.

 


Share it if you like it