”கொங்கு நாடு” என்பதா தி.மு.க கடும் ஆத்திரம்..!

”கொங்கு நாடு” என்பதா தி.மு.க கடும் ஆத்திரம்..!

Share it if you like it

பா.ஜ.க முன்னாள் தலைவர் ‘எல்.முருகன் அவர்கள், மத்திய அமைச்சராக அண்மையில் பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்கும் முன்பு தமிழகத்தின் கொங்கு நாட்டை சேர்ந்தவர்’ என சுயவிபர குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழகத்தை, ‘தமிழ்நாடு’ என்றாலும், மத்திய அரசை, ‘ஒன்றிய அரசு’ என்று சொன்னாலும், பிரிவினைவாத உள்நோக்கம் இருக்கிறது என, ‘தேச ஒற்றுமை, இறையாண்மை’ குறித்து, பா.ஜ.,வினர் எங்களுக்கு வகுப்பெடுக்கின்றனர். எல். முருகன் தொடர்பான சுயவிபர குறிப்பில், நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் என்பதற்கு பதில் ‘கொங்கு நாடு’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விபரங்களை, மத்திய அரசு வெளியிட்டது என்று சொன்னாலும், அதை கொடுத்தவர் முருகனாகத்தான் இருக்க வேண்டும் என்று தி.மு.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு பா.ஜ.க மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி அவர்கள் தி.மு.கவிற்கு இவ்வாறு பதிலடி கொடுத்து உள்ளார்.

நாமக்கல் பகுதி கொங்கு நாட்டுக்குள் வருவதால், அதை, ‘கொங்கு நாடு’ எனக் குறிப்பிட்டிருக்கலாம். மற்றபடி, கொங்கு என்ற சொல் அழகான தமிழ் சொல். அந்த வகையிலும், கொங்கு நாடு என, சுயவிபர குறிப்பில் இடம் பெற வைத்திருக்கலாம். ‘ஒன்றியம்’ என்ற சொல்லுக்குள் உள்நோக்கம் இல்லை’ என, தி.மு.க., சொல்கிறது. அதுபோலவே, கொங்கு நாடு என்ற சொல்லாடலுக்கு பின்னணியில், உள்நோக்கம் எதுவும் கிடையாது என்று குறிப்பிட்டு உள்ளார்.


Share it if you like it