கொரோனாவில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்கும் பொருட்டு ஆக்ஸிஜனை தயாரித்து வழங்க நாங்கள் முன் வருகிறோம் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் முன்வந்தது. ஆனால் வி.சி.க.,வின் தலைவரும் பிரபல ஆபாச பேச்சாளருமான தனது அழுக்கு நிறைந்த எண்ணத்தை அண்மையில் இவ்வாறு வெளிப்படுத்தி இருந்தார்.
மோடி அரசே, மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளாதே. ஆக்ஸிஜன் தாயாரிப்பதாகச் சொல்லி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிக்காதே. ‘ஆயிரம்பேர் செத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவிடமாட்டோமென’ கட்டியம் கூறும் உழைக்கும் மக்களின் போர்க்குரல் ஆளுவோரின் செவிப்பறையைக் கிழிக்கட்டும் என்று கூறியுள்ளார்.
பல அப்பாவிகளின் உயிரை காக்கும் பொருட்டாவது. ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கலாம் என்று கூற மனம் இல்லாமல். தமிழர்களின் உயிருடன் விளையாடும் இவரை போன்று பிண அரசியல் செய்யும் நபர்களை புறக்கணிக்க வேண்டும் என்று அப்பொழுது நெட்டிசன்கள் தங்களின் கடும் கோபத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளது. அ.தி.மு.க, பா.ஜ.க, என்றால் அலறும் திருமா தி.மு.க அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து வாய் திறப்பாரா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மோடி அரசே, மக்களின் உணர்வுகளைப் புறந்தள்ளாதே.
ஆக்ஸிஜன் தாயாரிப்பதாகச் சொல்லி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முயற்சிக்காதே.
'ஆயிரம்பேர் செத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கவிடமாட்டோமென' கட்டியம் கூறும் உழைக்கும் மக்களின் போர்க்குரல் ஆளுவோரின் செவிப்பறையைக் கிழிக்கட்டும்.@PMOIndia pic.twitter.com/hhLh3cD2yH
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 23, 2021