தமிழக முதல்வர் செய்த அதே தவறை செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியம்..!

தமிழக முதல்வர் செய்த அதே தவறை செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியம்..!

Share it if you like it

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதாவிற்கு நடிகர்கள், இயக்குனர்கள், தங்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தது மட்டுமில்லாமல் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் புகார் தெரிவித்தனர்., இதனை தொடர்ந்து முதல்வர் கடிதம் எழுதி இருந்தார்.

  • தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகருக்கு எழுத வேண்டிய கடிதத்தை, தகவல் தொழில் நுட்ப’ அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு கடிதம் எழுதியது மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருந்தது.
  • ஒரு மசோதா எந்த துறையை சார்ந்தது என்பது கூட தெரியாமல் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.  இது கூடவா அரசு அதிகாரிகளுக்கு தெரியவில்லை என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து இருந்தனர்.

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும்  என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி அவர்கள் மா.சுப்பிரமணியத்திற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிலடி கொடுத்து உள்ளார்

சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்க வேண்டியதை கல்வித்துறை அமைச்சரிடம் கேட்கிறாரே? ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் எந்த துறை சார்ந்த அமைச்சருக்கு கடிதம் எழுத வேண்டும் என்பது கூட தெரியாமல் இருக்கும் இவர்களை நினைத்து சிரிப்பதா அல்லது அழுவதா என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Image

 

 


Share it if you like it