பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவஜோத் சித்துவை நியமிக்க அக்கட்சியின் தலைமை எடுத்த முடிவுக்கு அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங் தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து சோனியாவிற்கு அண்மையில் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டு இருந்தார்.
கட்சித் தலைமை தம் மீது விரும்பத்தகாத முடிவுகளைத் திணிக்கிறது. அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள இச்சூழ்நிலையில் சித்துவை பஞ்சாப் மாநில தலைவராக நியமனம் செய்வது தேர்தல் முடிவுகளை கடுமையாக பாதிக்கக்கூடும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
முதல்வரின் கருத்திற்கு செவி சாய்க்காமல் சித்துவை அம்மாநில தலைவராக காங்கிரஸ் கட்சியின் தலைமை அண்மையில் அதிரடியாக அறிவித்தது. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள கேப்டன் அம்ரிந்தர் சிங் தனி கட்சி தொடங்கவோ? அல்லது பஞ்சாபில் ஆட்சி எந்நேரமும் கவிழவோ? வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#Farmers stage protest during new Punjab Congress Chief #NavjotSinghSidhu's visit to #Nawanshahr @Gurpreet_Chhina with more details pic.twitter.com/cn2pSkkftM
— Mirror Now (@MirrorNow) July 20, 2021
HUGE, MASKLESS CROWD WELCOMES SIDHU!
New #Punjab #Congress Chief #NavjotSinghSidhu received a rousing welcome on his #Amritsar visit. While huge crowds gathered to receive him, social distancing and mask norms went for a toss.@deepduttajourno with more! pic.twitter.com/bfhTmsyA8u
— Mirror Now (@MirrorNow) July 20, 2021