Share it if you like it
சென்னை வில்லிவாக்கத்தில், தனியாக வசித்து வந்த முதியவரின் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயன்ற குற்றத்திற்காக விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் உட்பட 3 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
லண்டனில் வசித்து வந்த பசுபதி தமது மனைவி மங்களேஸ்வரி இறந்ததும், சென்னை வில்லிவாக்கம் என்.ஆர். கார்டன் பகுதியில் சொந்தமாக உள்ள தனது பங்களாவில் குடியேறினார்.
அப்போது லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த பசுபதியின் மகள் சித்ரா தேவி தந்தையை கவனிக்க, அம்பிகா என்பவரை பணியில் அமர்த்தியுள்ளார். இந்நிலையில் பசுபதிக்கு உடல்நிலை குன்றவே அம்பிகா மூலம் செவிலியரான சினேக லதா என்னும் 68 வயது மூதாட்டியை, பணியில் அமர்த்தியுள்ளார்.
சிறிது காலம் சென்றதும், சினேகலதாவை, பசுபதி இரண்டாம் தாரமாக கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பசுபதி கடந்த டிசம்பர் உடல் நிலைப் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார். பசுபதி உயிரிழந்த நேரத்தில் மகள் சித்ரா தேவி லண்டனில் இருந்து சென்னை வந்து இறுதி சடங்கு செய்வதற்காக வந்தார். ஆனால் அவரை, வி.சி.க பிரமுகரான வழக்கறிஞர் அப்புன் , அம்பிகா, சுமதி, சினேக லதா உள்ளிட்டோர் கூட்டாக தடுத்துள்ளனர்.
மேலும் வி.சி.க பிரமுகரான அப்புன், சித்ராதேவியை ஒரு கோடி கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா தேவி இது தொடர்பாக வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து, சென்னை உயர்நீதி மன்றத்தில் நில அபகரிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் வி.சி.க பிரமுகர் அப்புன் உள்ளிட்டோரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து காவல் துறையினருக்கு உத்தரவிட்டது. இதன் படி, வழக்கறிஞர் அபுன், அம்பிகா மற்றும் சுமதி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
நன்றி ; தந்தி டிவி.
Share it if you like it