ட்விட்டர் நிறுவனம் எடுத்த நடவடிக்கைக்கு பாரதப் பிரதமர் மோடி மீது பழியை போட்ட நாடக குயின் ஜோதிமணி…!

ட்விட்டர் நிறுவனம் எடுத்த நடவடிக்கைக்கு பாரதப் பிரதமர் மோடி மீது பழியை போட்ட நாடக குயின் ஜோதிமணி…!

Share it if you like it

இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும், எதிரான தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதாக கடும் குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் உட்பட நெட்டிசன்கள் வரை மத்திய அரசிற்கு தொடர்ந்து புகார்களை தெரிவித்து வந்தனர்.

அதனை தொடர்ந்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், போன்ற சமூக வலைத்தளங்களின் மீது மத்திய அரசு தனது பார்வையை திருப்பியது.  அதன் அடிப்படையில் புதிய சட்டங்களை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் நடைமுறைக்கு கொண்டு வந்தது.

புதிய விதிகளின் படி, புகார்கள் குறித்து விசாரிக்க மற்றும் இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் குறை தீர்த்தல் அதிகாரியை உடனே நியமனம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல நிபந்தனைகளை மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

மத்திய அரசின் புதிய விதிகளை பேஸ்புக், கூகுள், வாட்ஸ்-அப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், புதிய விதிகளை ஏற்க தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான ட்விட்டர் நிறுவனம்.

புதிய விதிகளை ஏற்கும் படியும் இல்லையேல் சட்டரீதியிலான நடவடிக்கைகளை எதிர்கொள்ளும்படி மத்திய அரசு டுவிட்டர் நிறுவனத்திற்கு அண்மையில் இறுதி எச்சரிக்கை விடுத்தது. டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க கூடாது. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ் உட்பட அதன் தோழமை கட்சிகள் தங்கள் கருத்தை தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி உட்பட அக்கட்சியின் முக்கிய அதிகாரப்பூர்வ டுவிட்டர் ஐடியை, தற்காலிகமாக டுவிட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. வழக்கம் போல இதற்கும் மோடி அரசு தான் காரணம் என்று நாடக குயின் ஜோதிமணி மத்திய அரசு மீது மீண்டும் பழியை சுமத்தியுள்ளதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

 

https://twitter.com/moorthy1943/status/1426045907691130891

 

 


Share it if you like it