சுபஸ்ரீ மரணத்திற்கு பொங்கிய முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் 13 வயது சிறுவன் தினேஷ் மரணத்திற்கு வாய் திறப்பாரா?

சுபஸ்ரீ மரணத்திற்கு பொங்கிய முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் 13 வயது சிறுவன் தினேஷ் மரணத்திற்கு வாய் திறப்பாரா?

Share it if you like it

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஃப்ளெக்ஸ் பேனரால் 23 வயது உடைய அப்பாவி இளம் பெண் சுபஸ்ரீ இறந்த சம்பவம் நாடு முழுவதும் அப்பொழுது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சுபஸ்ரீ இல்லத்திற்கு நேரில் சென்று  அக்குடும்பத்திற்கு ஆறுதல் கூறியது மட்டுமில்லாமல் மாநிலத்தில் “பேனர் கலாச்சாரத்தை” முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து தனது கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்து இருந்தார்.

எதிர்க்கட்சியாக இருக்கும் வரை தான் நாங்கள் வாக்குறுதி கொடுப்போம் ஆளும் கட்சியாக ஆன பின்பு எது குறித்தும் எங்களுக்கு கவலையில்லை என்பது போல் இன்று வரை தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்பட அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் எண்ணமாக இருந்து வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க அமைச்சர் பொன்முடியை வரவேற்கும் விதமாக 13 வயது உடைய சிறுவன் தினேஷ் கொடிக்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டு உள்ளான் அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அச்சிறுவன் மருத்துவமனையில் உயிர் இழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்டுத்தியுள்ளது. சுபஸ்ரீ இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய விளம்பர தலைவர் சிறுவன் தினேஷ் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறுவாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சுபஸ்ரீ மீது பேனர் விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது subashree cctv subasri subashri banner - YouTube


Share it if you like it