பிரிட்டோவின் வீட்டுக்கு அலறி அடித்து ஓடிய ஜோதிமணி, கனிமொழி எங்கே?

பிரிட்டோவின் வீட்டுக்கு அலறி அடித்து ஓடிய ஜோதிமணி, கனிமொழி எங்கே?

Share it if you like it

சில ஆண்டுகளுக்கு முன்பு சுஜித் என்னும் குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிர் இழந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெற்றோர் செய்த தவறுக்கு அப்பொழுது அட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு தான் காரணம் என்று தி.மு.க-வின் மூத்த தலைவர்கள் முதல் முன்களப்பணியாளர்கள் வரை தொடர்ந்து தமிழக மக்கள் மீது தங்கள் எண்ணத்தை திணித்தனர் என்பது அனைவரின் கருத்தாக இருந்து வருகிறது. ஸ்டாலின், கனிமொழி, ஜோதிமணி, போன்றவர்கள் சுஜித் அப்பா பிரிட்டோவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர் மேலும் தி.மு.க சார்பில் நிதி உதவியும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தி.மு.க அமைச்சர் பொன்முடியை வரவேற்க 13-வயது சிறுவன்  கொடிக்கம்பம் நடும் பொழுது மின்சாரம் தாக்கி சமீபத்தில் உயிர் இழந்த சம்பவம் தமிழகத்தையே கடும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆனால் இது குறித்து தமிழக முதல்வரோ, உதயநிதியோ, இன்று வரை கருத்து தெரிவிக்காமல் கள்ள மெளனம் காத்து வருவது மக்கள் மத்தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஜித் இல்லத்திற்கு ஓடிய ஸ்டாலின், ஜோதிமணி, கனிமொழி, இப்பொழுது எங்கே? ஓளிந்து கொண்டு இருக்கிறார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Image

Image


Share it if you like it